Friday, July 8, 2016

டோனி பிளேயர் ஒரு போர் குற்றவாளி!


ஆங்கிலத்தில்: ஜெமீ மெரில்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
(ஜெமீ மெரில்லின் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பரப்பாகவும், பிஸியாகவும் இருந்த பக்தாத் நகரின் கர்ராடா பகுதி தியில் எரிந்துகொண்டிருக்கம் சந்தர்ப்பத்திலும்கூட, கடந்த ஞாயிறு முதல் பல குடும்பங்கள் அங்கு வருகின்றன.

2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வீதியோரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட இத்தாக்குதலில் 250 அளவிலானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட சில்கோட் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அவசியமற்றதொன்றாகும். அப்போதைய ஈராக்கின் தலைவராக இருந்த சத்தாம் ஹுஸைன் உடனடியாக அச்சுறுத்தலாக விளங்காதமையால், அமைதியான மாற்று வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவ்வறிக்கை சுடு;டிக்காட்டுகின்றது.

இராணுவ ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் பலமுறை எச்சரிக்கப்பட்டாலும் அவற்றை அவர் புறக்கணித்து விட்டார் என்று ஸர் ஜோன் சில்கோட்டின் ஈராக் விவகாரம் குறித்த விசாரணை குறிப்பிடுகின்றது.


மிக அவசரமாக-சத்தாம் ஹுஸைனின் இரசாயன ஆயுத திட்டத்துக்கு அஞ்சி- யுத்தத்துக்கு செல்வதற்கான உண்மையான காரணம் தவறான உளவுத்துறை காரணங்களாகும் என்று சில்கோட் அறிக்கை குறிப்பிடுகின்றது. எவ்வாறான நிலை ஏற்பட்டாலும், தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்ஷுக்கு ஆதரவாக இருக்கப் போவதாக 2002 ஆரம்பத்தில் டோனி பிளேயர் குறிப்பிட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை நிரூபித்துள்ளது.

மொத்தம் 2.6 மில்லியன் சொற்களைக் கொண்ட இவ்வறிக்கையை தயார் செய்ய 7 வருட உழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏழு வருடங்களுக்குள்ளும் ஈராக்கில் வன்முறைகள் உச்சகட்டமடைந்து ஸ்திரமின்மை அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் நடந்த குண்டு தாக்குதலில் இதன் ஒரு மோசமான அங்கமே.

ஈராக்கை ஆக்கிரமிப்பதன் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதமும், பிரச்சினைகளும் வளரும் என்றும், எதிர்வுகூற முடியாத பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் பிளேயருக்கு பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டுள்போதும் அவர் அவற்றை புறக்கணித்துள்ளதாக சில்கோட் அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. ஈராக் ஆக்கிரமிப்பட்டதனாலேயே ஐ.எஸ். உருவாகியது பல நிபுணர்கள் உடன்படுகின்றனர். ஆனாலும், பிளேயர் உடன்படுவதாக இல்லை.

ஈராக்கை ஆக்கிரமிப்பதனால், அது பிரித்தானியாவிலும் பாதிப்பக்களை ஏற்படுத்தும் என்று பிளேயர் எச்சரிக்கப்பட்டபோதும், அவர் அதனையும் புறக்கணித்து விட்டார். இருப்பினும், ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு 3 வருடங்களுக்குள்ளால் ஒரு ஜூலை மாத ஞாயிறன்று லண்டனில் 52 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

தவறான உளவுத் துறை தகவல்களை மையப்படுத்தியே ஈராக் குறித்த கொள்ளை அமைந்துள்ளது என்பது இப்போது தெளிவாகின்றது. அந்தத் தகவல்களை மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம். ஆம், கட்டாயமாக மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். என்கிறார் அறிக்கையை வெளியிட்டுள்ள ஸர் சில்கோட்.

ஈராக் மீதான யுத்தத்துக்கு முன்னர் பிரித்தானிய சட்டமா அதிபரிர் லோர்ட் கோல்ட்ஸ்மித், ஈராக் மீது யுத்தம் மேற்கொள்படுவதற்கு நியாயமாக, ஈராக் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பது குறித்து டோனி பிளேயரிடம் விசாரித்துள்ளபோதும், மறுநாள் பதிலளித்துள்ள டோனி பிளேயர், யுத்தம் மேற்கொள்வதற்கு தனது கெபினட்டுடன் மேற்கொண்ட முடிவெடுக்கும் செயல்முறை குறித்து எதுவித விடயங்களையும் பகிர்ந்து கொண்டில்லை. இந்த விவகாரத்தையும் சில்கோட் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சில்கோட்டின் அறிக்கை வெளிவந்து சில மணி நேரங்களிலேயே கருத்து வெளியிட்டள்ள, பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின், ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு தனது கட்சி ஆதரவளித்தது குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார். என்றாலும், இவ்வாக்கெடுப்பில் ஜெரமி கோர்பின் ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஈராக் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்வதற்கு பிளேயர் முடிவெடுத்ததன் பின்னர், அவர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், சில்கோட் அறிக்கை வெளியிடப்படும்போது, மிகவும் வெறுக்கப்படும் பிரித்தானிய பிரதமர்களில் ஒருவராக மாறியிருந்தார்.

ஈராக் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புக்கு ஐக்கிய இராச்சியம் பங்கெடுப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக பிளேயர் குறிப்பிட்டுள்ளபோதும், ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு ஒரு வெற்று காசோலையை தான் புஷ்ஷுக்கு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக் கணக்கிட முடியாதளவு கார் குண்டுகளும், தற்கொலை தாக்குதல்களும், கொலைகளும், படுகொலைகளும் நாளாந்தம் நிகழ்ந்து வருகின்றபோதும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஐ.எஸ்ஸை உருவாக்கி விட்டது என்பதை அவர் ஏற்பதாக இல்லை.

No comments: