Wednesday, December 26, 2012

எமக்காகப் பேசுகின்ற மாற்று மதத்தவர்களை உருவாக்க நாம் தவறியிருக்கிறோம்: என்.எம் அமீன்


('2012 ல் இடம்பெற்று வரும் நிகழ்வுகளின் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில், மீள்பார்வை ஊடக மையம் 12.12.2012 அன்று புதன்கிழமை கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடத்தியது. இதில் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஜஹாஸ் என்.எம் அமீன் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தொகுத்து வழங்குகிறேன். இந்தத் தொகுப்பு நான் மீள்பார்கை;காக செய்தது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.)

தொகுப்பு: அஷ்கர் தஸ்லீம்

நெருக்கடியானதொரு கால கட்டத்தில் இதுபோன்றதொரு தலைப்பிலே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள மீள்பார்வை ஊடக மையத்துக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், இது இந்தக் காலத்தின் தேவையான ஒரு கலந்துரையாடலாக இருக்கின்றது. எங்களுடைய சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற சவால்கள் பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

Monday, December 10, 2012

யூஸுப் நபியின் கதை (சிறுவர்களுக்கானது) - பகுதி 01



சிறுவர்களுக்கான பல ஆக்கங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் இருக்கிறேன்... அல்ஹம்துலில்லாஹ்! கொஞ்சம் கொஞ்சம் பதிவேற்றலாம் என்று உத்தேசம்...

(அரபு மூலம்: அபுல் ஹஸன் அலி ஹஸன் அந்நத்வி




யூஸுஃப் ஒரு சின்னப் பையன்.
மிகவும் அழகானவன்.
விவேகமானவனும் கூட...
அவனுக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர்.
ஆனால், யூஸுஃபின் தந்தை யஃகூப் (அலை)
ஏனைய அனைத்து சகோதரர்களையும் விட,
யூஸுஃபைத்தான் அதிகம் நேசித்தார்.

Friday, December 7, 2012

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்!



(கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் 'ஸம்ஸம்' சஞ்சிகைக்காக எழுதியது...)


அன்பின் தம்பி தங்கைகளே!

இன்றை உலகம் ஓர் அறிவியல் உலகம். நாளுக்கு நாள் புதிய புதிய கலைகள் உருவாக்கப்படுகின்றன. எத்தனையோ விதவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அறிந்து உலகத்தோடு சேர்ந்து வாழ வேண்டுமாயின் நாம் கட்டாயம் பல்வேறு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த சாதனமே வாசிப்புப் பழக்கமாகும். இதுவே மிகச் சிறந்த பொழுது போக்கு சாதனமும் ஆகும்.