Saturday, September 21, 2013

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கான பேரணி


சிறுபான்மைகளுக்கு எதிரான ஒரு இனவாதப் போக்கு இலங்கையில் தலைதூக்கி வருவதை நாம் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நாட்டில் மீண்டுமொரு இனப் பிரச்சினையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிரான ஒருமைப்பாட்டுக்கான பேரணி (Rally for Unity) என்ற பெயரில் கொழும்பிலும் மாதரையிலும் இரு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பேரணிகளை இனம் மதம் சாராது மூவினங்களையும் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர்கள் இணைந்து நடாத்தியுள்ளனர். ஒருமைப்பாட்டுக்கான பேரணிகளை (Rally for Unity)  ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்த பிரதிபா பெரோ, பிரபுதீபன், அப்துல் ஹாலிக் அஸீஸ் ஆகியோரை மீள்பார்வைக்காக சந்தித்தேன்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

ஒருமைப்பாட்டுக்கான பேரணி (சுயடடல கழச ரnவைல) திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது! இது என்ன?

பிரதிபா பெரேரா:

பிரதிபா பெரேரா
நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இதுபோன்றே கருத்தைச் சொல்வதற்கான சுதந்திரம், நண்பர்களுடன் பழகுதல், சமத்துவம் எனபனவும் எனது அன்றாடத் தேவைகள்தான். ஏனையோருக்குத் தொந்தரவு கொடுக்காது எனது விருப்பம்போல் நண்பர்களுடன் பழகுவதற்கும் எனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் யாரேனும் தடை விதித்தால் அது பிரச்சினையே.

சமீபத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்னைப் போன்றே எனது ஏனைய சகோதரர்களுக்கும் அவர்களது தனித்துவத்தைப் பேணி வாழ்வதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு சாதாரண பிரஜையாக வாழ்வதற்கும் தடையாய் அமைந்து வருகின்றன.

நான் சாப்பிடுவதை யாரேனும் தடுப்பதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். எனது வீட்டை யாரேனும் பறித்துக் கொள்வதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். இதுதான் ஒருமைப்பாட்டுக்கான பேரணியின் (Rally for Unity) பின்னணி.