Friday, October 25, 2013

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பணம் சேர்க்கவே எமது பிராந்தியத்தில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகிறது - அதுரலியே ரதன தேரர்

rathana himi mp


நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்இன்ஸாப் ஸலாஹுதீன்

இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனை எந்நிலையில் உள்ளது?

இலங்கையில் போதைப் பொருள் பாவனையின் அளவுசமீபத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றது. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முக்கியமான குழுக்களுள் அல்காஈதா இயக்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான பணத்தை இதன் மூலம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கஸகஸ்தான்ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தப் போதைப் பொருள்களை பாரியளவில் விதைக்க முடியும். எனவேஇவை பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு வந்து,இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் ஒரு முறைமை உருவாகியிருன்றது என்பதுதான் தற்போது பார்க்கக் கிடைக்கும் தகவல்கள்.

இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் பிரதான இடமாக பாகிஸ்தான் உள்ளது. இலங்கைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்களில் 99 வீதமானவை பாகிஸ்தானிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில், 99 வீதமானோர் பாகிஸ்தானியர்களே

Thursday, October 3, 2013

என்றோ ஒரு நாள் மதச்சார்பற்ற அரசியல் கொண்ட நாடாக இந்த நாடு மாற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்: ராவய, பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ ஜனரஞ்சன உடனான நேர்காணல்

சட்டத்தரணி கே.டபிள்யூ ஜனரஞ்சன அவர்கள் பிலியன்தலயைச் சேர்ந்தவர். 1991 களில் ராவய பத்திரிகையில் கார்டூன் ஓவியராக இணைந்தார். பின்னர், அதன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். தற்போது அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

நேர்காணல் – அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்


நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை எப்படி நோக்குகிறீர்கள்?

மாகாணசபை தேர்தலை நோக்கும் போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்தத் தேர்தல் வடக்கிற்கு மாத்திரம் உரிய தேர்தல்தான். அல்லது வடக்கில் மாத்திரம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலாகும். வடக்கில் அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்பதனை அறிந்தே இருந்தது. அதனை சமப்படுத்துவதற்காகவே மத்திய, வடமேல் மாகாணங்களில் தேர்தலை நடத்த வேண்டி வந்தது. வடக்கின் தோல்வியை இந்த இரண்டினதும் வெற்றியைக் கொண்டு சமப்படுத்துவதே இதன் நோக்கம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த இரண்டையுமே அழுத்தம் கொடுத்துப் பேசின.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கின் தேர்தல் முக்கியமானது. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் பல புரளிகளைக் கிளப்பியது. சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இது தனிநாட்டுக் கோரிக்கையை கொண்டது, நாட்டைப் பிரிக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது ஜனநாயக நீரோட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பமாகும். எனவே, அவர்களது பயணம் எப்படி அமையப் போகின்றது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.