Monday, July 15, 2013

நாம் கற்பவை ஒரு நாளும் வீணாகப்போவதில்லை. நாம் வியாபாரம் செய்வதாக இருந்தால், நாம் கற்பவற்றைக் கொண்டு அதனை இன்னும் வளர்த்துக் கொள்ளலாம்: ஆபித் ருஷ்தி


ஆபித் ருஷ்தி பதுல்லையைச் சேர்ந்தவர். இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்துக்கான தொழினுட்பத்தை கண்டுபிடித்த குழுவில் இவரும் ஒருவர். இது ஆபித்துடன் நான் மேற்கொண்ட நேர்காணல்.


ஆரம்பமாக உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
நான் ஆபித் ருஷ்தி. எனது ஊர் பதுல்லை. நான் பதுல்லை மத்திய கல்லூரியில் சிங்கள மொழியில் கற்றேன். 2007 உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடளாவிய ரீதியில் 34 ஆவதாகவும் நான் சிந்தியடைந்தேன். இந்த வருடம் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் டெலிகொமினிகேஷன் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினேன்.

எனது தந்தை முஹம்மத் ஸாதுல்லாஹ். அவர் இலங்கை மின்சார சபையில் பொறியியலாளராகக் கடமையாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது குடும்ப வியாபாரமொன்றை நடாத்தி வருகிறார். எனது தாய் இஸ்ஸதுல் வஸீமா ஒரு இல்லத்தரசி. எனது மூத்த சகோதரன் பிஷார் ஹாதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினார். எனது இளைய சகோதரன் ஸாஜித் உஸாமா கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 ஆவது வருடத்தில் கற்கிறார்.