Thursday, June 16, 2016

மத்திய தரைக் கடலில் நங்கூரமிடும் ரஷ்யா!

லியுக் கெஃபி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

சைக்ஸ் பீகோ உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு இந்த மே மாதத்தோடு ஒரு நூற்றாண்டு கழிந்துள்ளது. எனவே, முதலாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் பிரான்ஸினதும், பிரித்தானியாவினதும் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாக மத்திய கிழக்கு துண்டாடப்பட்டது பெருமளவு நினைவுகூரப்பட்டது.

ஆனாலும், சைக்ஸ் பீகோ உடன்படிக்கைக்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை குறித்து அவ்வளவாக யாரும் அறிந்ததாக இல்லை. முதலாம் உலக ரஷ்யா, பிரான்ஸ், இந்த உடன்படிக்கையின்படி, துருக்கியின் ஜலசந்திகளையும், அப்போதைய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்துநோபிளயும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு அனுமதித்திருந்தது.

ரஷ்யாவுக்கு மத்திய தரைக் கடலை எதுவிதத் தடையுமின்றி நெருங்குவது கஷ்டமாகவே இருந்தது. 1914 இல் மகா யுத்தத்தின் முதல் வருடத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களில் 50 வீதமானவையும், அதன் விவசாய ஏற்றுமதிகளில் 90 வீதமானவையும் துருக்கி ஜலசந்திகள் ஊடாகவே கொண்டு செல்லப்பட்டன.

1917 இல் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சி, ரஷ்யாவை யுத்தத்திலிருந்து வெளியேற்றி விட்டிருந்தது. அதாவது கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை ஒருபோதும் உணரப்படுவதாக இருக்கவில்லை.



இன்றும்கூட, மத்திய தரைக்கடலை அணுகுவது உலகை அணுகுவதற்கான வழி என்பதை ரஷ்யர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

பணிப் போர் காலத்தில், அமெரிக்காவும் நேட்டோவும் பிராந்தியத்தில் என்ன செகின்றது என்பதை அவதானிப்பதற்கு, மத்திய தரைக் கடலில் ரஷ்யா ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தது.

பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டதன் பின்னர் ரஷ்யாவின் இந்த கப்பல் ரோந்து நடவடிக்கை கலைக்கப்பட்டதோடு, சமீபம் வரை மத்திய தரைக்கடலில் அதன் பிரசன்னம் வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின், ரஷ்யா பழைய நிலையை நோக்கி மீட்டெடுப்பதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளதோடு, ரஷ்ய கடற்படைக்கு மிக முக்கியமான ஒரு பிரதேசமாக மத்திய தரைக் கடலை அடையாளம் கண்டுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டள்ள கிரீமியாவுக்கு, இந்த வருட ஆரம்பத்தில் விஜயம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சோகு, ரஷ்யாவின் நலன்களுக்கு எதிரானவற்றின் மையமாக மத்திய தரைக்கடல் அமைந்தள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, மத்திய தரைக்கடலில் மையம் கொள்வதற்காக, ரஷ்ய கடல் படைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா, ஆசியாவில் மையம் கொள்ள ஆரம்பித்ததன் பின்னரே, மத்திய தரைக்கடலில் ரஷ்யாவின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவுக்கான தனது வியூகத்தை வலுவூட்டிக் கொள்ளவே ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் விரும்புகிறார். எனவேதான், அமெரிக்க கடற்படை விட்டுச் சென்றுள்ள இப்பகுதியில் ரஷ்ய கடற்படையை மையம் கொள்ள வைப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர் கண்டு கொண்டுள்ளார்.

மத்திய தரைக்கடலிலிருந்து இயங்குவதற்காக வேண்டி, எண்ணெ பெற்றுக் கொள்வதற்கான பல துறைமுகங்களை ரஷ்யா அடையாளம் கண்டு நெருங்கியுள்ளது. இவற்றில் பலவும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் துறைமுகங்களாகும். இது முக்கியமான ஒரு விடயமாகும். ஏனெனில், நேட்டோ ரஷ்யாவுடனான உறவுகளை முறித்துக் கொண்டுள்ளதோடு, ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

சிரியாவில் அலவிகளின் செல்வாக்கு அதிகமாக உள்ள டர்டூஸ் என்ற நகரில் ரஷ்யா ஒரு முக்கியமான கடற்படைத் தளத்தை நடத்தி வருகின்றது. எந்த விலை கொடுத்தேனும் இந்த கடற்படைத் தளத்தை பாதுகாக்கவே விலாடிமிர் புடின் விரும்புகிறார். இதன் காரணமாகவே, சிரிய ஜனாதிபதி பஷர் அஸத் பதவியில் தொடர்ந்துமிருப்பதை விலாடிமிர் புடின் விரும்புகிறார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அஸதும், டர்டூஸில் உள்ள ரஷ்ய கப்பல்களை பாதுகாப்பதோடு, மத்திய தரைக்கடலில் ரஷ்யாவின் கடற்படையின் பிரசன்னத்தையும் ஆதரிக்கிறார்.

ரஷ்யா கிரீமியாவை ஆக்கிர மித்ததன் பின்னர், ரஷ்ய இராணுவக் கப்பல் வைஸ் அட்மிரல் குலகோவ் 2014 ஜூலையில் மோல்டாவை தரிசித்திருந்தார். அத்தோடு யார்ஸோலவ் மட்ரி என்பவரும் 2015 பெப்ரவரியில் மோல்டாவை தரிசித்திருந்தார். மோல்டா ஒரு நேட்டோ நாடு அல்லாதபோதும், ஒரு ஐரோப்பிய யூனியன் நாடாகும்.

2015 ஜூலையில் ரஷ்யா கடற்படைக் கப்பலான கொரொலெவ் 130, கிரேக்கத்தை தரிசித்திருந்தது. ஐரோப்பிய யூனியன் நாடான கிரேக்கம், ஒரு நேட்டோ நாடுமாகும்.

இன்னுமொரு ஐரோப்பிய யூனியன் நாடான சைப்ரஸில் இராணுவத் தளம் அமைப்பதற்காக உரிமையை ரஷ்யா வேண்டுவதாகவும் ஒரு பெரிய வதந்தி பரவி வருகின்றது.

ரஷ்யா கடற்படைக்கு சேவை வழங்குகின்ற அனைத்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும், ஸ்பெய்னே மிகவும் மோசமானதாகும். சியுடா என்ற பிரதேசம் வட ஆபிரிக்காவில் அமைந்தள்ளது. இது ஸ்பெய்னின் அதிகாரத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகும். 2011 இல் இங்குள்ள துறைமுக வசதிகளை தொடர்ந்தேர்ச்சையாகப் பயன்படுத்துவதற்கு மொஸ்கோ ஆரம்பித்திருந்தது.

ஆபிரிக்கப் பகுதியில் அமைந்திருக்கின்ற இரு ஐரோப்பிய யூனியன் நகர்களில் ஒன்றான சியுடா ஸ்பெய்னுக்கு சொந்தமானதாகும். ஆபிரிக்காவில் அமைந்திருக்கின்ற அடுத்த ஐரோப்பிய யூனியன் நகரம் மெலில்லாவாகும். இந்த இரு நகர்களும் செங்கன் உடன்படிக்கைக்கு உட்பட்ட பகுதிகளாகும்.

2011 முதல் குறைந்தது 58 ரஷ்ய கடற்படை கப்பல்கள் ஸ்பெய்ன் துறைமுகங்களுக்கு வந்துள்ளன. இவற்றில் பல ரகங்களையும் சோந்த இரணுவக் கப்பல்கள் அடங்குகின்றன.

2014 மார்ச்சில் ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்து, ரஷ்யாவுடன் அதனை இணைத்துக் கொண்டதோடு, ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது. அது முதல் மொத்தம் 21 ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் எண்ணெ நிரப்புவதற்காக ஸ்பெனை தரிசித்துள்ளன.ரஷ்ய போர்க் கப்பல்கள் -குறிப்பாக ரஷ்யாவின் பெரும்

நீர்மூழ்கிக் கப்பல்கள்- தம் துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு - குறிப்பாக நேட்டோவின் முக்கியமான இராணுவத் தளங்ளுக்கு அண்மையில் அமைந்தள்ள துடிமுகங்களைப் பயன்படுத்துவதற்கு - ஐரோப்பிய நாடுகள் அனுமதிப்பது, அவற்றின் பொறுப்பற்ற தன்மையாகும்.

ரஷ்யா தனது இராணுவக் கப்பல்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் துறைமுகங்களை தரிசிப்பதன் மூலம் விலாடிமிர் புடின் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறித்துக் கொள்கிறார். ஒன்று, இந்த துறைமுகங்களை தரிசிப்பதன் மூலம் மத்திய தரைக்கடலில் இயங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இரண்டு, ரஷ்யா குறித்த கொள்கையில் ஐரோப்பா பிரிந்துள்ளது என்று புடின் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

No comments: