Tuesday, August 30, 2016

ஐ.எஸ். - ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!

ஆங்கிலத்தில்: டானியா ஒகம்பொஸ்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய தேசம் என்று தம்மை பிரகடனம் செய்து கொண்டு .எஸ் இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 12 வீதமான நிலப் பகுதியை 2016 இன் ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத் தகவல்கள் .எஸ்.எஸ்ஸின் நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், .எஸ் தம் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின் ஆரம்பப் பகுதியில் .நா உதவியில் லிபியாவில் இயங்கும் அரசு (.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள் சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
.எஸ். யுத்த களத்தில் தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று, .எஸ். ஒரு பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும் என்பது புலனாகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இன,மத சூழலமைவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், .எஸ், இராணுவ ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.

2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் உருவான புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு இடைவெளி, மத மற்றும் இனவாத நெருக்கடிகளை மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் உருவாக்கி விட்ட நிலையில், .எஸ்.சுக்குப் பிந்திய யுகம் குறித்த விரிவான அரசியல் மூலோபாயமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு சர்வதேச சமூகத்துக்கு இன்னும் முடியாமலுள்ளது.
ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!
மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளின் குழப்பங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு இடைவெளியை, .எஸ். தன் வரலாறு முழுவதும் நன்கு பயன்படுத்திக் கொண்டது.
1999 இல் அபூமுஸ்அப் அல்ஸர்காவி என்ற ஜோர்தானியர் ஜமாஅதுத் தவ்ஹீத் வல் ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம், நம்பகமான பாதுகாப்பு துறையையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் கொண்ட ஜோர்தானின் ஹாஷிமிய்ய முடியாட்சியை நீக்கி விடுவதாகும்.
2003 வரை இக்குழு மிகவும் இரகசியமான முறையிலேயே இயங்கியது. ஈராக்கில் சதாம் ஹுஸைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சட்டமற்ற சூழ்நிலையை அல்ஸர்காவி நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
அப்போது, ஈராக்கின் ஸுன்னி கிளர்ச்சி குழுக்களின் தலைவர்களோடு அல்ஸர்காவி கூட்டணி அமைத்திருந்தார். கலைக்கப்பட்டிருந்த ஈராக்கின் பாதுகாப்பு துறையின் உறுப்பினர்கள்தான் இக்குழுக்களில் அதிகம் இருந்தனர். அத்தோடு, 2004  ஒக்டோபர் 17 ஆம் திகதி ஒஸாமா பின்லேடனின் அல்கைதாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட அல்ஸர்காவி, தனது இயக்கத்தின் பெயரைஈராக்கில் அல்காஇதாஎன்று மாற்றிக் கொண்டார்.
இரு வருடங்களின் பின்னர், ஈராக்கிலுள்ள ஏனைய ஸுன்னி கிளர்ச்சி குழுக்களுடன் சங்கமமாகியஈராக்கில் அல்காஇதாமுஜாஹிதீன் ஷறா என்ற அமைப்பை உருவாக்கியது. பின்னர், இந்த அமைப்பு ஈராக்கின் இஸ்லாமிய தேசம் (இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் -.எஸ்..) என்ற அமைப்பால் பதிலீடு செய்யப்பட்டது. அபூபக்ர் அல்பக்தாதி என்று அறியப்படும் இப்றாஹிம் அவாத் அல்பத்ரி என்பவர் இந்த அமைப்பிற்கு தலைமை தாங்கினார்.
2013 ஏப்ரலில், .எஸ்.. தன்னை"ஈராக், ஷாம் தேச இஸ்லாமிய தேசம் (.எஸ்..எல்.) என்று மாற்றிக் கொண்டது. 2011 இல் ஜனாதிபதி பஷார் அல்அஸதுக்கு எதிராக மேலெழுந்த எழுச்சியின் பின்னர் ஏற்பட்ட குழப்பம் மூலம் இக்குழு நன்கு பயன்பெற்றது. அத்தோடு, ஈராக்கில் ஸுன்னிகள் அதிகாரமிழந்த சூழ்நிலையிலிருந்தும் நன்கு பயன்பெற்றது.
முஸ்லிம்களின் பெரும்பான்மையோர் இந்தக் குழுவின் சிந்தனை மீதோ, அதன் வன்முறை நுட்பங்கள் மீதோ அனுதாபம் கொள்ளாத நிலையில், 2014 ஜூன் 29 ஆம் திகதி, உலக முஸ்லிம்கள் அனைவரதும் ஏக அரசியல் மார்க்க அதிகாரத்தை கோரிய வகையில் அல்பக்தாதி, இஸ்லாமிய தேசத்தை (இஸ்லாமிக் ஸ்டேட் - .எஸ்) பிரகடனப்படுத்தினார்.
.எஸ். ஈராக்கிலும் சிரியாவிலும் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை விரிவாக்கிக் கொண்டே வந்தது. எவ்வாறாயினும் இந்தக் குழுவின் இராணுவ தாக்குதல்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டபோதும், இந்த வன்முறைகள் அனைத்தும், பலவீனமான இராணுவத்தைக் கொண்ட தோற்றுப்போன தேசங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. அரசியல் பாதுகாப்பு இடைவெளியை இக்குழு மீண்டும் பயன்படுத்திக் கொண்டது.
சர்வாதிகாரி முஅம்மர் அல்கடாபியின் அரசு வீழ்ந்ததன் பின்னர் ஏற்பட்டிருந்த வன்முறைத்தனமான அரசியல் பிளவுகளில் மூழ்கியிருந்த, எண்ணெய் வளம் மிகு லிபியாவிலிருந்த இராணுவக் குழுக்களும் இணைந்து வட ஆபிரிக்காவில் ஒரு வலையமைப்பை .எஸ். அமைப்பு இலகுவாக உருவாக்கிக் கொண்டது.
ஈராக்கிலும் சிரியாவிலும் போன்றே, வட ஆபிரிக்காவிலும் .எஸ்இன் பிரசன்னம் ஒரு நோயின் அறிகுறிதான். உடைந்து போன தேசிய அரசுகளதும், அரசியல் மற்றும் பாதுகாப்பு இடைவெளி உருவானமையும்தான் இந்தக் குழப்பமாகும்.
.எஸ். தோற்கடிக்கப்படுவதன் மூலம் புதியதொரு அதிகார மற்றும் பாதுகாப்பு இடைவெளியை உருவாக்காது என்று சர்வதேச சமூகத்துக்கு உத்தரவாதம் வழங்க முடியுமா?
.எஸ்சுக்கு பிந்திய விரிவான மூலோபாயம்
அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஆதரவில் இயங்கும் ஈராக்கிய படைகள், .எஸ் இன் கட்டுப்பாட்டிலுள்ள மோசூல் நகரை விடுவிப்பதற்காக தற்போது போராடி வருகின்றது.
மிக அவசரமாக இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளப்படவுள்ள இப்போர் -யுத்த களத்தில் எல்லா கூட்டணிகளும் வெற்றி பெறுவதுபோன்று- ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி விடும் என்பதுதான் துரதிஷ்டவசமானதாகும்.
.எஸ்ஸிடமிருந்து மோசூல் விடுதலை செய்யப்பட்டால், அங்குள்ளோருக்கு மனிதாபிமான உதவிகள், மீள்கட்டுமானம், அரச உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் இருக்கின்றனவா?
2016 ஜூலை 20-21 ஆம் திகதிகளில் 24 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் வொஷிங்டனில் கூடினர். ஈராக்கிற்கு உதவிகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் ஏற்பாட்டாளர்கள் 2 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை எதிர்பார்த்தபோதும், எதிர்பார்ப்பையும் விஞ்சி 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேகரிக்கப்பட்டது.
இருப்பினும், ஈராக்கிற்கு ஒரு பலமான சர்வதேச உதவி உள்ளபோதும், அங்கு புதிதாக வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசகளுக்கான உண்மையான ஓர் அரசியல் தீர்வோ, அல்லது சிரியாவில் ஏலவே .எஸ் இன் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை ஆட்சி செய்வதற்கான ஒரு மத்திய அதிகார சபையோ இல்லை.
விரிவான ஒரு தீர்வு இல்லாத நிலையில், பிராந்தியத்தில் வன்முறை குழப்பங்கள் நிச்சயமாக தொடரலாம்.
ஒரு யுத்தம் வெற்றிகொள்ளப்படுவது மீண்டுமொரு யுத்தத்தைத்தான் தூண்டும். .எஸ் போன்ற குழுக்கள் உருவாகுவதற்கான காரணங்களை பேசும் வகையில், ஒரு விரிவான அரசியல் மூலோபாயத்தை வரைவதும் நடைமுறைப்படுத்தும் மிக அவசரமான தேவையாக மாறியுள்ளது.
ஐக்கிய ஈராக்கை உருவாக்கும் திட்டம் சாத்தியம் என்றால், ஈராக்கின் குர்தி, ஸுன்னி மற்றும் ஷீஆ சமூகங்களுக்கு இடையில் சமமான பிராந்திய அதிகாரப் பிரிப்பு குறித்த உடன்படிக்கையொன்று சாத்தியமா? என்று கலந்துரையாடுவதற்கான நேரம் இதுதான்.
குர்திஸ்தான் பிராந்திய அரசின் தலைவர் மஸத் பர்ஸானியின் மகனும், குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்ஸிலின் தலைவருமான மஸ்ரூர் பர்ஸானி அண்மையில் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர், ்கூட்டமைப்பு (பெடரேசன்) முறைமை  முறையாக செயற்படவில்லை. எனவே, சம்மேளன (கொன்பெடரேசன்) முறைமை அல்லது முழுமையான பிரிப்பு ஆகிய அரசியல் தீர்வுகள்தான் எடுக்கப்படல் வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஈராக் கொன்பெடரல் முறைக்கு மாற வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துப் பேசியுள்ள அவர், நமக்கு மூன்று கொன்பெடரல் மாநிலங்கள் இருக்குமாயின் (குர்தி, ஸுன்னி, ஷீஆ) நம்மிடம் சமாந்தரமான மூன்று தலைநகர்கள் இருக்கும். இவற்றில் எதுவும் எதை விடவும் உயர்ந்ததாகாது என்று கூறியுள்ளார்.
குர்திஸ்தான் பிராந்திய அரசு என்பது ஏலவே ஈராக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட பிராந்தியமாகும். அதற்கேயுரிய அரசியல் கட்டமைப்பும் இராணுவமும் அதனிடமுள்ளது. பெஷ்மர்கா எனப்படும் இந்த இராணுவம் .எஸ்சுக்கு எதிராக போரிடுகின்ற ஒரு பலம் வாய்ந்த இராணுவம் என்று தன்னை நிரூபித்துள்ளது.
எவ்வாறாயினும், ஈராக் குர்தி மக்கள் நாட்டின் வட மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் பெருமளவு வாழ்கின்றபோதும், ஈராக்கின் ஸுன்னி ஷீஆ மக்கள் நாடெங்கும் பரந்து வாழ்கின்றனர். எனவே, ஸுன்னி, ஷீஆ நில எல்லை வரையறுக்கப்படுமாயின், இன்னுமொரு பிரச்சினைத் தொடரொன்று உருவாகும் நிலையும் உள்ளது.
இன்னுமொரு புறத்தில் சிரியாவில் ஓர் இராஜதந்திர தலைநகருக்கான முதலீடுகளை ஆரம்பிப்பதற்கான நேரமும் வந்துள்ளது. அத்தோடு, .எஸ் இயக்கத்திற்கு பிந்திய சிரிய தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் கவனம் எடுக்கும்படி, ஜனாதிபதி பஷார் அல்அஸத்தின் தலைமையிலான சிரிய அரசின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யாவை -(.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்) ஊக்குவிக்க வேண்டிய நேரமும் வந்துள்ளது.
அயல் நாடான சிரியா ஒரு குப்பையாக உள்ள நிலையில், ஈராக்கிற்கான அரசியல் தீர்வொன்றை எடுப்பது உண்மையான வெற்றியாக அமைய மாட்டாது. ஏனெனில், இங்கு பிராந்திய ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும்.
ஈராக் மற்றும் சிரியாவுக்கு, .எஸ்ஸுக்குப் பிந்திய விரிவான அரசியல் மூலோபாயமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுடன், .எஸ் ஸை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் உண்மையான வெற்றியை தீர்மானிக்கும். இவ்வாறான ஓர் அரசியல் மூலோபாயத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதுதான் இப்போதைய தேவையாகவுள்ளது.

No comments: