Thursday, June 27, 2019

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கெம்பஸ்: இதுவரை கிடைத்த தகவல்கள்



லசந்த ருகுணகே


ஷரியா பல்கலைக்கழகம் என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்படுகின்ற 'மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட்' நிறுவனம் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர், தெரிவித்து வருகின்றனர். இவற்றுக்கு மத்தியில் அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களும், அந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஆனாலும், இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெரும்பாலானோரிடம், அவற்றுக்கான ஆதாரங்கள் உண்டா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது. ஏனனில், குற்றச்சாட்டு முன்வைப்போர் அதற்குரிய ஆதாரங்களை முன்வைக்காமையே இச்சந்தேகத்துக்கான காரணமாகும்.

நாட்டை குழப்புவதற்கு, தீ வைப்பதற்கு சத்தமிடாதபோதும், இந்த மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் நிறுவனம் பற்றி பாராளுமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறை கண்காணிப்பு மேலாண்மைக் குழு நியமித்த உயர் கல்வி பற்றிய உப மேலாண்மைக் குழுவுக்கு அப்பொறுப்பு பாரப்படுத்தப்பட்டுள்ளது.


உயர் கல்வி பற்றிய அமைச்சின் செயற்பாடுகளை மிகவும் ஆழமாக கண்காணிப்பதற்கான அவ்வுப மேலாண்மைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதன் தலைமைத்துவம் கலாநிதி ஆசு மாரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளத. ஏனைய உறுப்பினர்களாக சஞ்சய பெரேரா, முஜிபுர்ரஹ்மான், அங்கஜன் ராமநாதன், ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் விஜேபால ஹெட்டியாரச்சி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை மிகவும் முறையாக கொண்டு செல்வதற்காக விசேட கவனம் செலுத்துவது, அவ்வுப மேலாண்மைக் குழுவின் பொறுப்பாகும். அந்த வகையில்தான் மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் பற்றி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அதற்கு முன்னர் அவ்வுப மேலாண்மை சபை சைடம் பற்றியும் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சின் அரச சார்பற்ற உயர் கலவி பிரிவினால் பட்டம் வழங்குவதற்கான அனுமதியை கொரியுள்ள நிறுவனங்கள் பற்றி சிக்கல்கள் எழுந்த சந்தர்ப்பங்களில், அது குறித்து கவனம் செலுத்தும் வழிமுறைக்கு அமைய, மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் பற்றி உபகுழு விடயங்களை ஆராய்ந்துள்ளது.

இந்த ஆராய்வு, மட்டக்களப்பு கெம்பஸ் நிதி மூலதனம் தொடர்பில் வெளிவராக தகவல்களை வெளிப்படுத்தல் மற்றும் அவற்றை மேலும் பகுப்பாய்வு செய்தல், அதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இடம் பற்றி ஆராய்தல், கட்டிடத்தின் உள்ளக அமைப்பு மற்றும் சூழல் தாக்கங்கள் குறித்து ஆராய்தல் ஆகிய பிரிவுகளின்படி நடைபெற்றுள்ளது. இங்கு மட்டக்களப்பு கெம்பஸ்ஸிற்குச் சென்று நேரடி கண்காணிப்பு செய்தல் மற்றும் அந்நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்குரிய அனுமதியைப் பெற்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விடயங்களை விசாரித்தல் ஆகியன, விடயங்களை ஆராயும் வழிமுறைகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கெம்பஸ்ஸின் உரிமையாளர்கள் மற்றும் கல்வி நடவடிக்கை சபையின் முக்கியஸ்தர்களின் அதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த வகையில் உயர் கல்வி அமைச்சு இலங்கை வங்கி, இலங்கை முதலீட்டு சபை, இலங்கை மகாவலி அதிகார சபை, காணி அமைப்பு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகம், கம்பனிகள் பதிவாளர் திணைக்களம், மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளை உபகுழுவுக்கு அழைத்து, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மட்டக்களப்பு கெம்ஸுடன் தொடர்புடைய நபர்களை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அனைத்துக்கும் பிறகு தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவை தான் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்று, அவ்வறிக்கை வெளிவரும் வரை எம்மால் கூறமுடியாது. ஆனாலும், அவ்வுபகுழு மட்டக்களப்பு கெம்பஸ் பற்றி செயற்பட்ட காலப்பகுதியில் வெளிவந்த தகவல்கள் குறித்து கலந்துரையாடல் இக்கட்டுரையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் மட்டக்களப்பு கெம்பஸ் பற்றி வாசகர்களுக்கு சரியான ஒரு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சாட்சியம்

இந்த மட்டக்களப்பு கெம்பஸின் ஒரு உரிமையாளர் தரப்பாக 'ஹிரா பவுண்டேசன்' என்ற நிறுவனம் இருந்துள்ளது. இது 2014 டிசம்பர் 10 ஆம் திகதி ஜீஏ 2991 இன் கீழ் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கம்பனியின் பதிவு இலக்கம் 10/18 லேக்ட்ரைவ், கொழும்பு 08 என ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பின்னர், அத 324 சீ, காலி வீதி, கொழும்பு 03 என்று மாறியுள்ளது.

இந்த அமைப்பின் ஆரம்ப பணிப்பாளர்களாக 10/18 லேக்ட்ரைவ் கொழும்பு 08 என்ற முகவரியுடைய எம்.எல்..எம். ஹிஸ்புல்லா (முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்) மற்றும் அவரது மகன் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோரே குறிப்பிடப்பட்டுள்ளனர். கம்பனி செயலாளர்களாக இலக்கம் 20/14, முதலாம் மாடி, அப்துல்லா சென்டர், சீமன்ஸ் வீதி, மருதானை, கொழும்பு 10 இலுள்ள எக்ஸ்பர்ட் பிஸ்னஸ் கன்ஸல்டன்ஸ் (தனியார்) லிமிடட் நிறுவனம் செயற்பட்டுள்ளது.

இந்த முதல் பணிப்பாளர்கள் இருவரிலும் எம்.எல்..எம். ஹிஸ்புல்லா 2018.12.28 ஆம் திகதி பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அத்தோடு, அதற்குப் பதிலாக அஹமட் ஹிபாஸ் ஹிஸ்புல்லா ஒரு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப் பல்கலைக்கழகத்திற்குரிய கம்பனியானது 'மட்டக்களப்பு கெம்பஸ் கொலேஜ் (தனியார்) லிமிடட்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பதிவு முகவரியாக ஹிரா பவுண்டேசனின் ஆரம்ப முகவரியான கொழும்பு 08, லேக்ட்ரைவிலுள்ள முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மாறிய முகவரியாக ஹிரா பவுண்டேசனின் மாறிய முகவரியான கொழும்பு 03, காலி வீதியிலுள்ள மேலைய முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப பணிப்பாளர்களாக எம்.எல்..எம். ஹிஸ்புல்லா மற்றும் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் செய்பட்டுள்ளனர். ஆரம்ப பங்குதாரர்களாக ஹிரா பவுண்டேசன் மற்றும் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்பட்டுள்ளனா. ஹிரா பவுண்டேசனுக்கு 90000 பங்குகளின் உரிமை இருந்துள்ளதொடு, அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாவுக்கு 10000 பங்குகளின் உரிமை இருந்துள்ளது. இங்கு கம்பனி செயலாளர்களாக ஹிரா பவுண்டேசனின் கம்பனி செயலாளர்களாக செயற்பட்ட எக்ஸ்பர்ட் பிஸ்னஸ் கன்ஸல்டன்ஸ் (தனியார்) லிமிடட் கம்பனியே செயற்பட்டுள்ளது.

அதன் பின்னர் இந்த கம்பனியின் பெயர் மட்டக்களப்பு கெம்பஸ் (தனியார்) லிமிடட் என்று 206.02.29 ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளதோடு, பங்குதாரரான பணிப்பாளர் அஹமட் ஹிராஸ் ஹிஸ்புல்லாவின் பெயரும் முஹம்மட் ஹிஸ்புல்லா அஹமட் ஹிராஸ் என்று மாறியுள்ளது. அதேபோல் 2019.01.04 ஆம் திகதி எம்.எல்..எம். ஹிஸ்புல்லாவும் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதோடு, பணிப்பாளர் சபைக்கு நான்கு பேர் பின்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு 08 லேகட்ரைவில் இலக்கம் 10 18 இல் வசிக்கும் முஹம்மட் ஹிஸ்புல்லா அஹமட் ஹிபாஸ் ஹிஸ்புல்லா, வெள்ளவத்தை விவேகானந்த வீதி, இலக்கம் 55 இல் வசிக்கும் மொஹமட் சஹாப்டீன் மொஹமட் இக்ராம், மல்வான கந்தவத்த இலக்கம் 1788 இல் வசிக்கும் அஹமட் மிலார் மொஹமட் பசூல் ஜிப்ரி மற்றும் கொழும்பு 09 தெமடகொட வீதி இலக்கம் 466 3 பீ இல் வசிக்கும் மொஹமட் ராசிக் மொஹமட் சும்பி ஆகியோரே இவர்களாவர்.

பின்னர் 2019.03.08 ஆம் திகதி கம்பனிக்கான புதிய பணிப்பாளர்கள் இருவர் நியமிக்கப்படுகின்றனர். தெஹிவளை டி சில்வா வீதி, ஜயசமகி மாவத்தை இலக்கம் 44 77 இல் வசிக்கும் சீனி மொஹமட் மொஹமட் இஸ்மாயில் மற்றும் கம்பஹா விஷாகா வீதி இலக்கம் 15 இல் வசிக்கும் தென்னகோன் தொன் கமல் தர்மசிரி தென்னகோன் ஆகியோரே அவர்களாவர்.


தொடரும்...
(நன்றி: அனித்தா)

No comments: