Friday, October 25, 2013

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பணம் சேர்க்கவே எமது பிராந்தியத்தில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகிறது - அதுரலியே ரதன தேரர்

rathana himi mp


நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்இன்ஸாப் ஸலாஹுதீன்

இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனை எந்நிலையில் உள்ளது?

இலங்கையில் போதைப் பொருள் பாவனையின் அளவுசமீபத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றது. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முக்கியமான குழுக்களுள் அல்காஈதா இயக்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. அவர்களுக்குத் தேவையான பணத்தை இதன் மூலம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கஸகஸ்தான்ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தப் போதைப் பொருள்களை பாரியளவில் விதைக்க முடியும். எனவேஇவை பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு வந்து,இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் ஒரு முறைமை உருவாகியிருன்றது என்பதுதான் தற்போது பார்க்கக் கிடைக்கும் தகவல்கள்.

இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வரும் பிரதான இடமாக பாகிஸ்தான் உள்ளது. இலங்கைக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்களில் 99 வீதமானவை பாகிஸ்தானிலிருந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களில், 99 வீதமானோர் பாகிஸ்தானியர்களே
.

எனவேகுறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பணம் சேர்க்கும் ஒரு செயற்திட்டமாகவேஎமது பிராந்தியத்தில்போதைப் பொருள் வியாபரம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு கொண்டு வரப்படும் போதைப் பொள்ருகளில் பெரும் தொகை இலங்கையில் நின்று விடுகின்றன. இவற்றில் சட்டத்தில் சிக்கிய தொகை எமக்குத் தெரியும். ஆனால்சட்டத்தில் சிக்காது அங்குமிங்கும் எவ்வளவு தொகை பரந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனவேபெரும்தொகை போதைப் பொருள் கிராமங்கள் வரை பரந்து விட்டிருப்பதை இலங்கையில் காணலாம்.

இவற்றைத் தடுப்பதற்கு அரசும் மக்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதா?

அரச தரப்பிலிருந்து இது குறித்து இன்னும் சற்றுக் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்று நான்நினைக்கிறேன்ஏனென்றால்இவ்வளவு பெரிய போதை பொருள் வியாபரமொன்றை பொலிஸ்அதிகாரிகளினதும்அரசியல்வாதிகளினதும் தொடர்பில்லாமல் செய்ய முடியாதுஎனவேஇதற்குப்பின்னால் அரசியல்வாதிகளினதும் மேல் அதிகாரிகளினதும் அனுமதியொன்று இருக்க வேண்டும்.இவற்றைத் தடுக்கும் விடயத்தில் கோதபாய ராஜபக்ஷ போன்றொருவருக்கு பெரும் பொறுப்பு இருக்கின்றது.இவ்வாறான மோசமான விடயங்களுக்கு அவர் ஒருபோதும் ஒத்தாசை புரிய மாடடார் என்று நாம்நினைக்கிறோம்சட்ட விரோத போதைபொருள் கொண்டு செல்வதற்கு எதிராக அவரது பங்களிப்பு இன்றுதேவைப்படுகின்றது.

தற்போது இலங்கை போதைபொருள் கைமாறும் இடமாகப் பயன்படுத்தப்படுகின்றதுஇது ஒரு பயங்கரமானநிலையாகும்ஏனெனில்கைமாற்ற முடியாவிட்டால்அந்தப் போதைப் பொருள்கள் இங்கே தங்கி விடும்.இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சில போதைப் பொருட்கள் இங்கு நின்றுவிட்டால் இலங்கை மிஞ்சாது.கடந்த இரு மாதங்களில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை பார்க்கும்போது தற்போதுபயன்படுத்தப்படும் போதைப்பொருள்களிலும் பார்க்க 10 மடங்கு அதிகமாக போதைப் பொருள் கொண்டுவரப்பட்டுள்ளனஅரசு இதில் தலையிட வேண்டும் என்று நம்புகிறோம்.

பொது மக்களிடம் பெரியதொரு பிரச்சாரம் இருக்க வேண்டும்குறிப்பாககொழும்பு வாழ் முஸ்லிம்தமிழ்,சிங்கள சமூகங்கள் இணைந்து ஒரு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்பொதுவாகப் பார்த்தால்,முஸ்லிம் பொது மக்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லைபோதைப் பொருளுக்கு அதிகம்அடிமையாகி இருப்பது சிங்களவர்கள்தான்குறிப்பிட்டளவு ஏழை முஸ்லிம்களும் போதைப் பொருளுக்குள்சிக்கியுள்ளனர்சிறையில் இருக்கும் பெண்களில் குறிப்பிட்டளவு முஸ்லிம்களும் உள்ளனர்போதைப்பொருள் கொண்டு செல்லும்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்எனவேமூன்று இனங்களும் இணைந்து,மக்களை அறிவூட்டும்புணருத்தானம் செய்யும்விழிப்பூட்டும் ஒரு தேசிய வேலைத் திட்டமொன்றுஅவசரமாக உருவாக்கப்படல் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இலங்கையிலுள்ள அனைத்து மதங்களும் போதைப் பொருளை எதிர்க்கின்றன. எனவேஅனைத்து மதத்தவர்களும் இணைந்து போதைப் பொருளை எதிர்க்கும் வேலையை செய்ய முடியாதா?

அப்படி செய்வதாக இருந்தால் மிகவும் நல்லது. இது குறித்து மக்களிடையே மத சமாதானமொன்று ஏற்பட வேண்டிய காலமென்று நான் நினைக்கிறேன். முஸ்லிம் தலைவர்களோடு நான் கலந்துரையாடிய சந்தர்ப்பமொன்றில்முஸ்லிம்சிங்கள இளைஞர்க ளை குழுவாகப் பயிற்றுவிப்போம் என்று நாம் சொன்னோம். ஆனால்துரதிஷ்டவசமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவொரு நல்ல கருத்து.

இதனை முனனெடுத்துச் செல்வீர்களா?

பல முஸ்லிம்களிடம் நான் இதனைச் சொல்லியுள்ளேன். ஆனால்அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. முஸ்லிம் இளைஞர் 50 பேரையும்சிங்கள இளைஞர் 50 பேரையும் எடுத்து போதைப் பொருளுக்கு எதிராக போராடக் கூடியஅது பற்றித் தேடக்கூடியஅது பற்றிய தெளிவை ஏற்படுத் தக்கூடிய வகையில் பயிற்றுவிப் போம் என்று நான் சொன்னேன்.

பொதுவாகப் பார்க்கும்போது முஸ்லிம் சமூகத்தில் சாராயம்போதைப் பொருள் பாவனை குறைவாகவே உள்ளது. ஆனால்ஏழைகளுக்கு மத்தியில் சிகரட் பாவனை அதிகமாக உள்ளது.

இலங்கையில் பல இனமதத் தவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் சகவாழ்வை எப்படி உருவாக்கலாம்?

நாட்டின் விவசாயம்சுகாதாரம்போக்குவரத்துகல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் பற்றிய தேசிய கருத்தாடலை சூழ அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கின்ற திட்டமொன்று எமக்கு அவசியம். அதற்கான காலம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

இலங்கையில் இனமதங்களுக்கு இடையிலான சவாழ்வு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

நாட்டில் பொதுவான தேசியக் கொள்கையொன்று இல்லாமைதான் பிரதான பிரச்சினை என நான் நினைக்கிறேன். உதாரணமாக கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். சர்வதேச பாடசாலைகள்ஏழைகளுக்கு வேறு பாடசாலைகள்பிரதான பிரபலமான பாடசாலைகள் என்றிருக்கின்றன. நாட்டின் பிள்ளைகளை உருவாக்குவதற்குகல்வியில் ஒருமித்த தன்மை இல்லை. கல்வியின் மூலமாகத்தான் ஐக்கியத்தை உருவாக்கலாம். மத அடிப்படையிலான பாடசாலைகளை அளவுக்கு அதிகமாக உருவாக்குவதை எந்த மதம் செய்தாலும் அது அவ்வளவு பொருத்தமானதல்ல.

அடுத்ததுஉலகில் இருக்கின்ற அடிப்படைவாத போக்கு. ஏனெனில்அரபுலகில் இருக்கின்ற எண்ணெய்ப் பணம் ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு வருகின்றன. பின்னர்அவை ஆயுதக் குழுக்க ளாகச் செயற்படுகின்றன. இதற்கு ஆப்கானிஸ்தான் சிறந்த உதாரணம். ஆப்கானிஸ்தானில் சோவியத் அதிகாரத்திலிருந்தபோதுசோவியத் சக்தியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் அமெரிக்காவினால் முஸ்லிம் அடிப்படை வாதம் கிளப்பப்பட்டது. இது முழுமையாக ஒரு அமெரிக்க உற்பத்தியாகும். தாலிபான் இயக்கத்துக்குத்தான் முஸ்லிம்கள் முதலில் உதவினார்கள். இந்த முஸ்லிம் அடிப்படைவாதக் கருத்து இதற்கு முன்னால் இல்லாதவாறு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலும் வந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் மதத்துக்குள் பெறுமதியான விழுமியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஐக்கியம்,ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளுதல்ஏனையோரைப் பற்றி சிந்தித்தல் போன்ற பெறுமதியான பல விழுமியங்கள் இருக்கின்றன. ஆனால்முஸ்லிம் மதம் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்காது,வெளிப்படையான விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றது. உதாரணமாக பெண்கள் கருப்பு அணிந்து தலை மூடுதலுக்கு அவசியமற்ற முக்கியத்துவத்தைக் கொடுப்பது. இதன் மூலம் சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் தனிமைப்படுத்தப்படுகின்றது.

அதேபோன்றுதான் ஹலாலும். உணவுக் கலாசாரத்தினுள் அளவுக்கதிகமாக மத சட்டத்தை பலப்படுத்த முயற்சித்தல். இது கடந்த காலத்தில் பெரிய சச்சரவாக மாறியது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள பலம்வாய்ந்த மத அடிப்படைவாத விடயங்கள் இலங்கையில் கசிவதன் விளைவாகத்தான் இவை தோன்றுகின்றன.

ஆனாலும்முஸ்லிம் மதத்திலுள்ள ஏழைகளுக்கு உதவுதல்தாம் பெறும் இலாபத்தை மக்கள் மத்தியில் பிரித்துக் கொடுத்தல்கூட்டுறவு முறை போன்ற பெறுமதியான பெறுமானங்கள் முற் படுத்தப்படுவதில்லை. அதற்கு மாற்றமாக அவசியமற்ற வெளிவாரியான விடயங்களே முற்படுத் தப்படுகின்றது. பௌத்த மதத்திலும் இவ்வாறுதான் உள்ளது. உதாரணமாக சந்திகளில் புத்தர் சிலை வைப்பதைச் சொல்லலாம். சந்திகளில் புத்தர் சிலை வைத்து பௌத்த மதத்தைப் பரப்ப முடியாது. மற்றையதுஅவசியமற்ற வகையில் சத்தத்தை அதிகரித்து பிரித்’ கெஸட்கள் போடப்படுகின்றன. இதன் மூலம் பௌத்த மதம் பிரச்சாரப்படுத்தப்படுவதில்லை. தர்மம் என்பது தமக்குள்ளே கற்க வேண்டிய ஒன்றாகும்.

இன்னொரு புறத்தில்தமிழ் மக்களிடையே இனவாதம் உள்ளது. தாம் வேறொரு மக்கள் என்ற வகையில் தனியான நிலத்தை வேண்டி நிற்கின்றசுயாட்சி வேண்டி நிற்கின்றளவுக்குக் கொண்டு செல்லும் தமிழ் அரசியல் கருத்தியல் உள்ளது. இந்த அனைத்து விடயங்களாலும் பொது மக்களாக எழுந்திருப்பதற்குப் பதிலாக தனித்து விடுவதுதான் நிகழ்கின்றது.

குழந்தைகளுக்கு நாட்டைப் பற்றிய உணர்வைத் தருகின்றஇலங்கை எமது நாடு என்ற உணர்வைத் தருகின்ற தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவதன் மூலமாகத்தான் இந்த நிலையைத் தவிர்க்க முடியும். இந்த மனோநிலையை கல்விக்குள்ளால் உருவாக்குவதற்கான திட்டமொன்று இல்லாமைதான் பாதிப்பாக அமைந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு உங்களது செய்தி என்ன?

தெற்காசியாவிலுள்ள இந்தியாபாகிஸ்தான்பங்களாதேஷ்நேபாளம் போன்ற சனத்தொகை கூடிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மக்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பழக்கவழக்கங்கள்சுத்தம்வன்முறையின்மைஉரிமைகள்நலன்புரி வேலைகள்சுகாதாரம் ஆகிய துறைகளில் எமது மக்கள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளனர். நாம் இன்னும் கொஞ்சம்தான் முன்னே செல்ல வேண்டியுள்ளோம்.

நாட்டுக்குப் பொருத்தமான ஒரு பொருளாதாரத் திட்டத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண் டும். எமது பொருளாதாரம் குறித்த பார்வையொன்று இந்த அரசுக்குக் கிடையாது. அரச திறைசேரிக்கு பணம் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு கெஸினோ கொண்டு வரப்படுகிறது. எனவேஇவ்வாறானதொரு பலவீனமாக நிலையில் நாம் இருக்கிறோம்.

இது மிகவும் நல்லதொரு நாடு. ஏனைய நாடுகள்பொருளாதாரம்சராசரி ஆயுட்காலம்எழுத்தறிவு,நிர்வாக சேவை ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை மக்கள் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால்எமது அரசியலமைப்பு ஒரு சிக்கலாக உள்ளது. விருப்பு வாக்கு முறைமை ஒரு சிக்கலாக உள்ளது. குறைந்தளவு, நாம் இவற்றையாவது திருத்திக் கொள்ளவில்லை. அடுத்ததாகஎமதுகல்விக் கொள்கையை நாம் முறையாக வினைத்திறன் மிக்கதாக்கிக் கொள்ளவில்லை. எனவேஇவற்றை நாம் திருத்திக் கொண்டால்சிறந்த நாடாக உலகில் எழுந்து நிற்கலாம்.

முஸ்லிம் சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முஸ்லிம் சமூகம் 2, 3 தசாப் தங்களுக்கு முன்னர் மிகவும் நெருக்கமாகஐக்கியத்தோடு வாழ்ந் தார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். எமது சிறந்த பக்திப் பாடல்களை மொஹிதீன் பேக் பாடியுள்ளார். எமது சிறந்த பாடகர் மலே முஸ்லிமான ஹருன் லன்த்ரா. இசைத் துறையில் கௌஸ் மாஸ்டர் முக்கியமானவர்.

எமது நாட்டைப் பற்றி சிந்திக்கின்றகல்விமருத்துவம்இசைகலை ஆகிய துறைகளில் செயற் படுகின்ற முஸ்லிம்கள் எமக்கு தேவை. தலையை மூடி ஆடை அணிவதற்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால்கருப்பு அணிவது அரபு கடும்போக்குவாதிகளின் பாதிப்பாகும்.

கொழும்புப் பகுதியில் இருக்கும் உலமாக்கள் முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால்வெளிப் பிரதேசங்களிலுள்ள உலமாக்கள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது எனது அவதானமாகும்.

No comments: