Showing posts with label Turkish Analysis. Show all posts
Showing posts with label Turkish Analysis. Show all posts

Sunday, April 24, 2016

குர்திஷ்: ஒரு சர்வதேசப் பிராந்தியத்தின் தன்னாட்சிக்கான போராட்டம்

ஐந்து நாடுகளிலும் பிரிந்திருக்கும் மாபெரும் குர்திஸ்தான் பிராந்தியம்


 அஷ்கர் தஸ்லீம்

மத்திய கிழக்குப் பிராந்தியம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், சர்வதேச அரசியலில் மிகுந்த தாக்கம் செலுத்தி வருகின்றது. உஸ்மானிய முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, துண்டாடப்பட்ட மத்திய கிழக்கில் குர்தி இன மக்கள் பிரதான நான்கு நாடுகளில் சிதறும் வகையில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஈராக், ஈரான், துருக்கி, சிரியா மற்றும் -சிறியளவில்- ஆர்மேனியா ஆகிய நாடுகளில் குர்தி இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய கிழக்கில் இன அடிப்படையில் நான்காவது பெரும்பான்மை இனமான குர்திகளுக்கு, இன அடிப்படையிலான தேசமொன்று இல்லை. எனவேதான், தமது இனத்துக்கான தேசமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் குர்திக்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுத ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமாக குர்திக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்றைய, தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றனர். இந்த ஐந்து பிராந்தியங்களும் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அவ்வந்த நாடுகளில் எல்லைப் பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. எனவே, குர்திக்கள் வாழும் இந்தப் பிராந்தியங்கள் இணைந்து மாபெரும் ‘குர்திஸ்தான்’ பிராந்தியத்தை சமைக்கின்றது.

Sunday, August 10, 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் 2014 - வெல்லப்போவது யார்?

ரஜப் தையிப் அர்தூகான்

(அஷ்கர் தஸ்லீம்)

-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-

இன்று (10.08.2014) துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..

துருக்கி வரலாற்றில் முதற் தடவையாக, ஜனாதிபதி ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் 2007 இல் கொண்டு வரப்பட்டது.

கலாசார ரீதியாக பிரிந்து போயுள்ள துருக்கியில்,  10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, July 11, 2014

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம்


நேர்காணல்: ஸாரா அலி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


ரஜப் தைய்யிப் அர்தூகான்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான முஹம்மத் ஸாஹித் குல் துருக்கியைச் சேர்ந்தவர். அல்முஜ்தமஃ சஞ்சிகை இவருடன் நடத்திய நேர்காணலில், துருக்கி பிரதமர் அHதூகானின் தேர்தல் திட்டமிடல்கள், அரபுலக விவகாரங்கள் தொடர்பாக அவரது நிலைப்பாடுகள், அயல் நாடுகளோடும் உலக நாடுகளோடும் எதுவித பிரச்சினைகளையூம் கொண்டிராத அவரது 'பூச்சிய பிரச்சினை" கொள்கை ஆகியன குறித்து கலந்துரையாடப்படுள்ளது. நண்பர்களோடு இந்த நேர்காணலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?


கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும் பெற்றுத் தந்த தலைமையுடன் தாம் இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.

47 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.

Wednesday, February 12, 2014

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி பற்றிய அறிமுகக் குறிப்பு

 (அஷ்கர் தஸ்லீம்)

இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது. அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின. துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.

துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

Monday, June 3, 2013

துருக்கியின் வெளியுறவுக் கொள்கை – ஒரு குறிப்பு


ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் பங்கெடுக்கின்றன. சிந்தனைகள், கோட்பாடுகள், பெறுமானங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச கள நிலவரங்கள், சவால்கள், சந்தர்ப்பங்கள், பல சமநிலை, உள்நாட்டு பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், புவியரசியல் நிலைமைகள், பொருளாதாரம் என்பன இதில் முக்கியமானவை. இந்தப் பின்னணிகளில் நின்றுதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதில் ஓரிரண்டு காரணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மதிப்பீடு செய்வது பொருத்தமில்லை.

Monday, September 17, 2012

அப்துல்லாஹ் குல் -துருக்கி ஜனாதிபதி-




'துருக்கியில் எவரும் எந்தப் பதவியையும் அடையலாம். அமைச்சர் முதல் ஜனாதிபதி வரையுள்ள அனைத்துப் பதவிகளும் அப்படித்தான். நாம் எவரையும் இவர் குர்தி இனம், இவர் துருக்கி இனம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.'           (அப்துல்லாஹ் குல்)

நவீன துருக்கியின் வெற்றிகரமான அரசியல் ஒழுங்கு பற்றிய அவதானததில் தவிர்க்க முடியாததொரு ஆளுமையாக தற்போதைய துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லை குறிப்பிட வேண்டும். அவர் மிகவும் நிதானமானவர். நுணுக்கமானவர்.

Sunday, June 10, 2012

அஹ்மத் தாவூத் ஒக்லு -நவீன துருக்கியின் வெளியுறவுக் கொள்கைச் சிற்பி-

'நாம் எமது மதம் மற்றும் அடையாளம் குறித்துப் பெருமையடைகிறோம். அதேவேளை நாம் ஐரோப்பிய கலாசாரத்தினதும் வரலாற்றினதும் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம். இதனையும் நாம் பெருமையாகக் கொள்கிறோம்.'


அல்ஜஸீரா ஊடகவியலாளர் ராகே ஒமாரிடம் இந்தக் கருத்தைச் சொன்னவர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத் ஒக்லு. இஸ்லாமிய உலகுடன் சிறந்த உறவை கட்டியெழுப்பி வருகின்ற அதேவேளை மேற்குலகுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்ற இந்த வகை அணுகுமுறையை துருக்கியின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டு வருவதில் அதிகம் பங்காற்றியவராக தாவூத் ஒக்லுவைக் குறிப்பிடலாம்.

1956 பெப்ரவரி 26ம் திகதி Konya என்ற ஊரில் பிறந்த தாவூத் ஒக்லு, இரண்டாம் நிலைக் கல்வியை ஸ்தான்பூல் உயர் பாடசாலையில் பெற்றார். 1983ல் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த தாவூத் ஒக்லு, முதுமாணிக் கற்கை நெறியையும் தொடர்ந்தார். பின்னர் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்திலேயே அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்தார்.

Wednesday, June 6, 2012

துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளை நோக்கி...


கலாநிதி முஹம்மத் அப்பாஸி 
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.

அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் படி 5 வருடங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி இரண்டு தடவைகள் பதவி வகிக்கலாம். அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அர்தூகான் எனும் அரசியல் ஆளுமை






சமகால அரபு இஸ்லாமிய உலகில் மிகுந்த மக்கள் அபிமானத்தை வென்ற தலைவர்களுள் துருக்கியப் பிரதமர் அர்தூகான் முன்னணியிலுள்ளார் என்பதில் எதுவித ஐயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியவாதிகள், முஸ்லிம் அல்லாத நடுநிலைப் போக்கு கொண்டோர் எனப் பல தரப்பினரும் அவரை ஆதரிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் அவர் துருக்கியை பொருளாதார சுபீட்சத்தைநோக்கி வழிநடாத்திச் சென்றார் என்பதற்கப்பால், அவர் சர்வதேச அரசியலில் நேர்மைக்காகப் போராடுகிறார் என்பதுதான்.

1954 ல் துருக்கியின் Rize என்ற கிராமத்தில் பிறந்தார் அர்தூகான். தனது ஐந்து குழந்தைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனக் கருதிய அர்தூகானின் தந்தை குழந்தைகளோடு இஸ்தான்புல் நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அர்தூகானுக்கு வயது 13. ஆரம்பக் கல்வியை இஸ்லாமியப் பாடசாலையொன்றில் பெற்ற அர்தூகான், பின்னர் இஸ்தான்புல் மர்மரா பல்கலைக்கழகத்தில் இனைந்து முகாமைத்துவத்   துறையில் பட்டப் படிப்பை முடித்தார். அர்தூகான் தொழில் ரீதியில் ஒரு உதைப்பந்தாட்ட வீரரும் ஆவார்.