Showing posts with label ஐரோப்பிய அரசியல். Show all posts
Showing posts with label ஐரோப்பிய அரசியல். Show all posts

Sunday, August 10, 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் 2014 - வெல்லப்போவது யார்?

ரஜப் தையிப் அர்தூகான்

(அஷ்கர் தஸ்லீம்)

-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-

இன்று (10.08.2014) துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..

துருக்கி வரலாற்றில் முதற் தடவையாக, ஜனாதிபதி ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் 2007 இல் கொண்டு வரப்பட்டது.

கலாசார ரீதியாக பிரிந்து போயுள்ள துருக்கியில்10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, July 11, 2014

அல்பேனியாவிலும் கொஸோவாவிலும் இனி ஒரே கல்வித் திட்டம்!

லின்டிடா நிகொல்லா

ஐரோப்பாவின் இரு முஸ்லிம் நாடுகளான அல்பேனியாவும் கொஸோவாவும் உத்தியோகபூர்வமாக ஒரே கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உடன்டிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இனி, அல்பேனியாவிலும் கொஸோவாவிலுமுள்ள பாடசாலைகள் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டியங்கும்.

இரு நாடுகளினதும் முன் பல்கலைக்கழக கல்வி குறித்த உடன்படிக்கையில் அல்பேனிய கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லின்டிடா நிகொல்லாவும் கொஸோவா கல்வி அமைச்சர் ராமி புஜாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம்


நேர்காணல்ஸாரா அலி
தமிழில்அஷ்கர் தஸ்லீம்


ரஜப் தைய்யிப் அர்தூகான்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான முஹம்மத் ஸாஹித் குல் துருக்கியைச் சேர்ந்தவர். அல்முஜ்தமஃ சஞ்சிகை இவருடன் நடத்திய நேர்காணலில், துருக்கி பிரதமர் Hதூகானின் தேர்தல் திட்டமிடல்கள், அரபுலக விவகாரங்கள் தொடர்பாக அவரது நிலைப்பாடுகள், அயல் நாடுகளோடும் உலக நாடுகளோடும் எதுவித பிரச்சினைகளையூம் கொண்டிராத அவரது 'பூச்சிய பிரச்சினை" கொள்கை ஆகியன குறித்து கலந்துரையாடப்படுள்ளது. நண்பர்களோடு இந்த நேர்காணலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?


கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும் பெற்றுத் தந்த தலைமையுடன் தாம் இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.

47 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.

Monday, June 3, 2013

துருக்கியின் வெளியுறவுக் கொள்கை – ஒரு குறிப்பு


ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் பங்கெடுக்கின்றன. சிந்தனைகள், கோட்பாடுகள், பெறுமானங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச கள நிலவரங்கள், சவால்கள், சந்தர்ப்பங்கள், பல சமநிலை, உள்நாட்டு பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், புவியரசியல் நிலைமைகள், பொருளாதாரம் என்பன இதில் முக்கியமானவை. இந்தப் பின்னணிகளில் நின்றுதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இதில் ஓரிரண்டு காரணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மதிப்பீடு செய்வது பொருத்தமில்லை.

Wednesday, June 6, 2012

துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளை நோக்கி...


கலாநிதி முஹம்மத் அப்பாஸி 
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.

அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் படி 5 வருடங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி இரண்டு தடவைகள் பதவி வகிக்கலாம். அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.