Showing posts with label வேறு. Show all posts
Showing posts with label வேறு. Show all posts

Monday, April 27, 2020

நெட்டை நெட்டை சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி - அரிய தகவல்கள்





அஷ்கர் தஸ்லீம்

ஒட்டகச்சிவிங்கி தான் உலகிலுள்ள மிக உயரமான பாலூட்டி விலங்காகும். அது கொண்டிருக்கின்ற உயரமான கால்களும், கழுத்தும் தான் இதற்கான காரணம். ஆபிரிக்க கண்டத்திலுள்ள திறந்த வெளி புல்நிலங்களில் இவற்றைக் காணலாம்.

ஒரு ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் ஒரு மனிதனின் சராசரி உயரமான 6 அடியையும் விட உயரமானதாகும். இந்த நீண்ட கால்களின் உதவியால், குறுகிய தூரங்களை மணிக்கு 35 மைல் வேகத்திலும், நீண்ட தூரங்களை சொகுசாக மணிக்கு 10 மைல் வேகத்திலும் கடக்கும் திறன் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உள்ளது.

Monday, September 16, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 02




பேராசிரியர் அப்துல் அஸீம்
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

இஸ்லாத்தில் நிதியளிப்பிற்கான முறையான ஏற்பாடு
இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில், முறையான நிதியளிப்பின் அடித்தளத்தை குறிக்கும் முதல் நிறுவனமாக பைதுல் மால் (நிதி இல்லம்) அல்லது பொது திறைசேரி அமைந்திருந்தது. அடிப்படையில் இது ஒரு அரச நிதி நிறுவனமாகும். ஆனால், இது தனிநபர்களுக்கும் கடன்கள் அல்லது முதலீட்டு மூலதனத்தை வழங்கியது. இது கலீபாவிற்கும் பொதுமக்களுக்குமான ஒரு அரச வங்கியாக இயங்கியது. உதாரணமாக, இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள், வணிக நோக்கத்திற்காக 4000 (திர்ஹம்) தொகையை ஹிந்த் என்பவருக்குக்கு வழங்கினார் (அத்தபரி, 1407 ஹி., தொகுதி 2, பக். 576-77). 
பொது நிதியிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக கடன் வழங்கப்பட்டதற்கு மற்றொரு உதாரணமும் உள்ளது. பஸராவின் ஆளுநரான அபூ மூசா அல்-அஷ்அரி (கி.பி. 662 மற்றும் 672 க்கு இடையில்), பைதுல்மாலுக்கு வழங்குவதற்காக மதீனாவில் உள்ள மத்திய திறைசேரிக்கு சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகரான மதீனாவுக்குப் பயணிக்க விரும்பிய அப்துல்லாஹ் மற்றும் உபைதுல்லாவுக்கு (உமர் இப்னுல் கத்தாபின் இரண்டு மகன்கள்) அவர் அந்தத் தொகையை வழங்கினார். பின்னர் அவர்களிடம், 'நீங்கள் ஈராக்கிலிருந்து பொருட்களை வாங்கி மதீனாவில் விற்கலாம். பின்னர், மூலதனத்தை அமீருல் முஃமினீனுக்குக் (கலீபாவுக்கு) கொடுங்கள். இலாபத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.' என்றார். ஈராக்கில் பொருட்களை வாங்கி மதீனாவில் விற்றதன் மூலம், அவர்கள் இலாபம் ஈட்டினர். பின்னர், அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு மூலனத்தை செலுத்தியபோது, மூலதனம் மற்றும் இலாபம் ஆகிய இரு தொகையையும் ஒப்பகை;கும்படி அவர் கூறினார். அப்துல்லாஹ் அமைதியாக இருந்தார். ஆனால், இளைய மகன் உபைதுல்லாஹ் ஆட்சேபனை தெரிவித்தார்: 'மூலதனம் குறைந்துவிட்டால் அல்லது அழிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அதற்கு உத்தரவாதம் அளித்திருப்போம். எனவே எங்களுக்கு இலாபம் கிடைக்க வேண்டும்.' என்று கூறினார். ஒரு சிறிய வாதத்திற்குப் பிறகு, ஒரு சட்டநிபுணரின் ஆலோசனையின் பேரில், உமர் (ரழி) அவர்கள் அதை ஒரு கூட்டு ஒப்பந்தமாகக் கருத முடிவு செய்து, அசல் பணத்தையும் இலாபத்தின் பாதியையும் ஏற்றுக்கொண்டார். உமர் (ரழி) அவர்களின் இரு மகன்களும் இலாபத்தின் அடுத்த பாதியை எடுத்துக் கொண்டனர் (மாலிக், 2002, ப. 419, அறிவிப்பு எண் 1396).

Monday, September 9, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 01



பேராசிரியர் அப்துல் அஸீம்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்


இந்த ஆய்வுக் கட்டுரையானது, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவிருக்கின்றது. அத்தோடு, பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத ஒரு பகுதியான, இஸ்லாமிய வரலாற்றின் இறுதிப் பகுதிகளில் காணப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள் மீதும் அவதானம் செலுத்தவுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையானது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் காணப்பட்டதையும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் நவீன இஸ்லாமிய வங்கிகளின் அபிவிருத்திக்கு முன்னைய நிலையையும் பதிவு செய்கின்றது. இஸ்லாமிய வங்கியியலானது பொருளாதார வாழ்க்கையின் நடவடிக்கைகளை இஸ்லாமிய வழிமுறையின்படி செயற்வதற்கான ஒரு முயற்சியாகக் காணப்பட்டது. இது முதலில் கிராமிய மற்றும் விவசாய பொருளாதாரங்களில் உருவானது. மாறாக, வழமையாக சொல்லப்படுவது போன்று பெட்ரோடொலார் அல்லது மத்திய கிழக்கில் எண்ணெய் வள எழுச்சிக்குப் பின்னர் தான் இஸ்லாமிய வங்கியியல் உருவானது என்பது தவறான கருத்தாகும் என்று இந்த ஆய்வு முடிவுரை வழங்குகின்றது.


அறிமுகம்

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தான், இஸ்லாமிய பொருளாதாரத்தின் மிகவும் கட்புலனாகும் நடைமுறை ரீதியான அடைவாகும். எவ்வாறாயினும், இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதலான இஸ்லாமிய பொருளாதாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை குறித்த நூல்களில், பொதுவாக, 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பாதிக்கு முன்னைய வங்கியியல் மற்றும் நிதியியல் குறித்த தகவல்களை நாம் காண முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் குறித்தும், நவீன இஸ்லாமிய வங்கிகளின் வருகைக்கு முன்னைய நிலை குறித்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அறிந்ததாக இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பவும், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலானது 20 ஆம் நூற்றாண்டின் பிரத்தியேகமான தயாரிப்பு என்ற தவறான புரிதலை நீக்கவும், இந்த ஆய்வுக் கட்டுரை முயல்கின்றது. அத்தோடு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்கின்றது. மேலும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காணப்பட்ட அரை-வங்கியியல் நிறுவனங்கள் குறித்த ஆரம்பகால பதிவுகளையும் இந்த ஆய்வு வழங்குகின்றது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வங்கிகளுக்கான ஒரு மாற்றீடாக இஸ்லாமிய வங்கிகள் வருவதற்கு முன்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை இவ்வாய்வுக் கட்டுரை விளக்குகின்றது. இறுதியாக, இஸ்லாமிய வங்கியியலானது அடையாள உருவாக்கம் அல்லது 'அகில இஸ்லாமிய'த்தின் ஒரு தயாரிப்பு; அது மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளால் ஊக்குவிக்கப்பட்டது என்ற கருத்தை மறுக்கின்றது.

Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.

Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.

Sunday, July 3, 2016

சீக்கியமும் முஸ்லிம்களும் பஞ்சாபும்



அஷ்கர் தஸ்லீம்

தலைப்பாகை அணிந்து. முறுக்கு மீசை வைத்த ஆண்களை, ஹிந்திப் படங்களில் அடிக்கடி காண்கிறோம். இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்களின் பெயருக்குப் பின்னால், ‘கான்” (இம்ரான் கான், ஆமிர் கான்…) என்று வருவது போல, இவாகளின் பெயருக்குப் பின்னால் ‘சிங்’ என்ற சொல் இருக்கும். ஆம், நீங்கள் நினைப்பவர்கள்தான் அவர்கள். சீக்கிய மதத்தைப் பின்பற்றும் பஞ்சாபி இனத்தவர்… சீக்கியமும் பஞ்சாபியும் பின்னிப் பிணைந்தவை.
உலகில் 20 மில்லியன் சீக்கியர் உள்ளனர். இவாகளில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலேயே வாழ்கின்றனா. அதுபோக, பஞ்சாபிலிருந்து சென்று, கனடாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும் பல சீக்கியர்கள் குடியேறியுள்ளனர்.
16 ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டது. குரு நானக் என்பவரே சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவா. அவரைத் தொடர்ந்து 9 சீக்கிய குருக்கள் உருவாகியுள்ளனா. 10 ஆவத குருவான கோபிந்த் சிங், இனிமேல் குருக்கள் உருவாக மாட்டர் என்றும், சீக்கியத்தின் மத நூலான ‘குரு கிரந்த் ஸாஹிப்’ இனிமேல் நிரந்தர குருவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.