நேர்காணல்: ஸாரா அலி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
![]() |
| ரஜப் தைய்யிப் அர்தூகான் |
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும்
அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி
பெற்றது. இந்த வெற்றி மூலம்,
தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார
அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும்
பெற்றுத் தந்த தலைமையுடன் தாம்
இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.
47 வீதமான வாக்குகளைப் பெற்று
வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான்
பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக்
கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.




