![]() |
| ஜோசப் எலியஸ் |
(அஷ்கர் தஸ்லீம்)
எமது மூதாதையர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். மொசாம்பிக் நாட்டுக்கு வந்த போர்த்துக்கேயர் எமது மூதாதையரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர். எமது மூதாதையருக்கு போர்த்துக்கேய மொழியையும் கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர்> இலங்கையை கைப்பற்றியதும் எமது மூதாதையரை அவர்களது காவலர்களாக இங்கே கொண்டு வந்தார்கள் என்று தமது இனத்தின் ஆபிரிக்கப் பூர்வீக வரலாற்றை என்னோடு பகிர்ந்து கொள்கிறார் புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நான் எப்போதும் போல் அன்றும்
பிபிசி இணையதளத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒரு
செய்தி என்னை ஈர்த்தெடுத்தது. அந்த செய்தி இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தைக்
கொண்ட கஃபீர் இன மக்கள் பற்றிப் பேசியது.
இலங்கையில் ஆபிரிக்கர்களா? அதுவும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்கிறார்களா? எனக்கு இந்த செய்தி சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கையில் வாழும் ஆபிரிக்க கஃபீர்
இனத்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த செய்தி எனக்குத் தந்தது. எனவே> புத்தளத்தைச் சேர்ந்த நண்பன் ஆஸாத்துடன் அவர்களைச் சந்திப்பதற்காகச்
சென்றேன்.