அஷ்கர் தஸ்லீம்
ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து
91.3 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்
பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் பெருமளவு போதைப் பொருள்கைப்பற்றப்பட்ட முதற்
சந்தர்ப்பம் இதுவே.
ரூ. 2
பில்லியன் பெறுமதி வாய்ந்த இந்த கொக்கைன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்டுள்ளது. 1 கிலோ பக்கட்களாக ஒழுங்குபடுத்தியே இப்போதைப் பொருள் இலங்கைக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் விசேட பிரிவினரால்
கொடுக்கப்பட்ட துப்பின் அடிப்படையிலேயே இப்போதைப் பொருள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் சிசிர விஜேசிங்க
தெரிவித்துள்ளார்.
40 வருடங்களாக சீனி இறக்குமதியில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இந்த கொக்கைன் போதைப்
பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். இந்த வியாபாரியும்
இதற்கு ஒத்துழைத்த இன்னும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.




