கலாநிதி முஹம்மத் அப்பாஸி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
துருக்கியின்
தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில்
ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.
அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி
தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி
தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்தின் படி 5 வருடங்களுக்காக
ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி இரண்டு தடவைகள் பதவி வகிக்கலாம். அடுத்த
ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவுசெய்யப்படுவார் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.