ஆங்கிலத்தில்: நோவா சபோ
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்அமெரிக்க
(நவமணி 22.06.2016)
தேர்தலில் டொனல்ட் ட்ரம்பும்,
ஹிலரி கிளின்டனும் போட்டியிடும் நிலை உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதியாகியுள்ளபோதும்,
தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று இதுவரையும் மிகச் சரியாக அனுமானிக்க முடியாத நிலையே தொடர்கிறது. ஹிலரி கிளின்டன் மிதவாத போக்கை பின்பற்றுகையில், டொனல்ட் ட்ரம்ப் மிகவும் கடும்போக்கை வெளிப்படுத்தி வருகிறார்.தான் ஆட்சிக்கு வரும்போது,
அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்காவில் குடியேறி வருவோருக்கு எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சிறுபான்மையின மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதோடு,
ட்ரம்பின் அறிவிப்புக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
ட்ரம்பம் அதிகாரத்தக்கு வருவதாயின்,
சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ள நேரிடும் அசௌகரியங்கள் குறித்து சிறுபான்மையினத்தவர் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதைத் தடுப்பதாகவும்,
அமெரிக்காவில் குடியேற வருவோரை எதிர்ப்பதாகவும் கூறும் டொனல்ட் ட்ரம்ப், அவரது மூதாதையரும்கூட அமெரிக்காவை ஆக்கிரமித்து குடியோர் என்பதை மறந்து போயுள்ளார் போலும்.
டொனல்ட் ட்ரம்ப் பொதுவெளியில் ஆவேசத்தையும்,
இனவாதத்தையும் தூண்டி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் திட்டத்துடனேயே களமிறங்கியிருப்பது நன்கு தெரிகின்றது.
இருப்பினும்,
அமெரிக்கர் யாரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒர்லண்டோ தாக்குதலின் பின்னர், இது பிரிந்து போவதற்கான சந்தர்ப்பம் அல்ல என்று கூறி, டொனல்ட் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக,
முஸ்லிம் சமூகத்துக்கும் மற்றும் ஒருபாலுறவுக்காரர்களுக்கும் ஆதரவான தலைவர்கள் கடந்த திங்களன்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்றுகூடியுள்ளனர்.
ஜூன் 12 ஆம் திகதி மத்திய புளோரிடா நகரில், ஒருபாலுறவுக்காரர்களின் களியாட்ட விடுதியொன்றில் மேற்கொளப்பட்ட துப்பாக்கி சூட்டில்
49 பேர் கொல்லப்பட்டு 53 பேர் காயமுற்றனர்.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட
29 வயது நிரம்பிய உமர் மதீன், ஆப்கானிய பூவீகத்தைக் கொண்ட அமெரிக்க முஸ்லிமாவான். சம்பவ தளத்திலேயே உமர் கொல்லப்பட்டான்.
ரிபப்லிகன் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக களமிறங்கவுள்ள டொனல்ட் ட்ரம், அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைவதை தற்காலிகமாக தடைசெய்யவுள்ளதாக பிரச்சாரப்படுத்தி வந்தார்.
கடந்த ஞாயிறன்று கருத்து வெளியிட்டள்ள அவர், முஸ்லிம்களின் விவரங்களை திரட்டும் திட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெருமளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
அத்தோடு,
LGBT
(பெண்களுக்கு இடையிலான ஒருபாலுறவு,
ஆண்களுக்கு இடையிலான ஒருபாலுறவு,
பெண்கள் மற்றும் ஆண்கள் என்று இரு பாலாருடனும் உறவு, பால்நிலையை மாற்றிக் கொள்தல்) சமூகமும் குறிடத்தக்களவு வாழ்கின்றது.
இந்த தலைவர்கள் டொனல்ட் ட்ரம்பின் கருத்துக்கள் பிரிவினை என்றும், ஆக்கவளமற்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.
நாம் பயந்து போயுள்ளோம்.
ஏனெனில்,
இது வீராவேசமாய் ஆரம்பித்து வருகின்றது. இதுமுளையிலேயே கிள்ளி எறியப்படாவிடின், பெருமளவானோர் இதனை ஏற்றுக் கொள்வர். என்று அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்ஸிலின் சிகாகோ பகுதியின் தலைவர் அஹ்மத் ரிஹாப் ஏ.எப்.பியிடம் கூறியுள்ளார்.
மேலும் டொனல்ட் ட்ரம்ப குறித்து தெரிவித்துள்ள அவர், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிடின், மக்கள் பீதிக்குள்ளாகுவார்கள்.
அவர் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுள்ளார். என்று கூறியுள்ளார்.
தாம் வெறுப்பு சம்பவங்களின் இலக்குகளாக மாறிவிடலாம் என்று சிகாகோ முஸ்லிம் சமூகம் பெரும் அச்சத்தின் மத்தியில் உள்ளதாக ரிஹாப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பெருமளவு முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளுள் சிகாகோவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதி பள்ளிவாசல்களுக்கு,
கடந்த வாரம் ஈமெயில் மற்றும் தொலைபேசி மூலம் இரு முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டள்ளதாகவும் ரிஹாப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களை பிரித்து விடுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை. அத்தோடு,
ஆழ்ந்த தேசிய சோதனைகளின்போது இது கூடவே கூடாது என்று, லம்ப்டா லீகல் என் ஃஎஆகூ சமூக நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் பெனெட் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
தமது நிறுவனமும்,
லம்ப்டா லீகல் நிறுவனம் இருவாரங்களுக்கொரு முறை சந்தித்து, மக்களுக்கு அவர்களது பின்னணிகளைப் பொருட்படத்தாது சம சிவில் உரிமைகளுக்கான, தெளிவான ஒரு பரஸ்பர அறிக்கையை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக ரிஹாப் மேலும் தெரிவித்துள்ளார்.
சிகாகோவின் முன்னுதாரணத்தை பார்க்குமாறு நான் மக்களை தூண்டுகிறேன்.
என்று பென்னட் கூறியுள்ளார்.
மா பெரும் சிகாகோ பகுதியில் 5.2 மில்லியன் மக்கள் உள்ளனர். இப்பகுதியைச் சோந்த இல்லினொய்ஸில் 4 இலட்சம் முஸ்லிம்களும்.
3 இலட்சத்து
70 ஆயிரம் LGBT சமூகத்தினரும் உள்ளனர்.
இது சமூகங்களை ஒவ்வொரு சமூகங்களுக்கும் எதிராக திருப்பி விடுவதற்கான ஒரு நேரமல்ல என்ற செய்தியை வழங்கவே நாம் முயற்சிக்கின்றோம்.
என்று ஈகுவலிடி இல்லினொஸ் என்ற ஒருபாலுறவு உரிமை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ப்ரயன் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்க அமெரிக்கர்கள், லத்தின் அமெரிக்கர்கள்,
முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர், பொலிஸார் தமது இனம். மதம், எந்த நாட்டு பின்னணியுடையவர் அல்லது இனக்குழுமம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு குற்றங்களின்போது தம்மை சந்தேகிப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் கலந்து வாழ்வது குறித்து அவர் கேள்வி கேட்கிறார்.
எமது அமெரிக்க பெறுமானங்களுடன் கலந்து வாழாமை குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன் என்று கூறியுள்ளார் ரிஹாப்.
இதேநேரம், லாஸ் வேகஸில் நடைபெற்ற டொனல்ட் ட்ரம்பின் கூட்டமொன்றில்,
பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து டொனல்ட் ட்ரம்ரை சுட்டு வீழ்த்த முயற்சித்த மைகல் சென்ட்போர் என்ற இளைஞன், கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளான்.
லாஸ் வேகாஸுக்கு வந்து டொனல்ட் ட்ரம்பை கொல்வதற்க,
தான் உணர்வுபூர்வமாக முயற்சி செய்ததாக மைக்கல் கூறியுள்ளான். டொனல்ட் ட்ரம்பை கொல்வதற்கான திட்டம் சரிவராது போனால், ட்ரம்பின் அடுத்த கூட்டங்களில் அவரை கொலை செய்ய முயற்சிப்பதற்காக,
அவர் பங்கு கொள்ளும் கூட்டங்களுக்கான டிக்கட்களை வாங்கி வைத்திருப்பதாகவும் மைக்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment