Showing posts with label மீள்பார்வை. Show all posts
Showing posts with label மீள்பார்வை. Show all posts

Wednesday, December 26, 2012

எமக்காகப் பேசுகின்ற மாற்று மதத்தவர்களை உருவாக்க நாம் தவறியிருக்கிறோம்: என்.எம் அமீன்


('2012 ல் இடம்பெற்று வரும் நிகழ்வுகளின் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில், மீள்பார்வை ஊடக மையம் 12.12.2012 அன்று புதன்கிழமை கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடத்தியது. இதில் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஜஹாஸ் என்.எம் அமீன் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தொகுத்து வழங்குகிறேன். இந்தத் தொகுப்பு நான் மீள்பார்கை;காக செய்தது என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.)

தொகுப்பு: அஷ்கர் தஸ்லீம்

நெருக்கடியானதொரு கால கட்டத்தில் இதுபோன்றதொரு தலைப்பிலே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள மீள்பார்வை ஊடக மையத்துக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், இது இந்தக் காலத்தின் தேவையான ஒரு கலந்துரையாடலாக இருக்கின்றது. எங்களுடைய சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற சவால்கள் பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.