කඞාවැටෙන්නට යන දේශපාලන ක්රමයේ අර්බුදය: අවසානය කුමක්ද?
உடைந்துபோகவுள்ள அரசியல் முறைமையின் குழப்பம்:
முடிவு எப்போது?
முடிவு எப்போது?
விக்டர் ஐவனின் மேற்குறித்த புத்தகம் 52 பக்கங்களைக் கொண்டது. அவர் ஸ்தாபித்த ராவய வெளியீட்டகத்தின் வெளியீடாக இது வெளிவந்துள்ளது.
விக்டர் ஐவன் பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நாடறிந்த பிரபலமான அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் அவர்.
இந்த புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துக்காக, புத்தகத்தின் முன்னுரையை இங்கு தமிழ்படுத்தியுள்ளேன்.
முன்னுரை
இலங்கையின் அரசியல் முறைமை பெரியதொரு குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கின்றது என்று சொல்லலாம். அரசாங்கக் குழப்பங்கள் மக்களுக்கு நன்றாகவே பழகிப்போயிருந்தாலும், அரசியல் முறைமையின் குழப்பம் மக்களுக்கு பழகிப்போனதொன்றல்ல.
அரசாங்கக் குழப்பங்கள் இலகுவானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வதும் இலகுவானது. அரசியல் முறைமையின் குழப்பம் நுணுக்கமானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலேசானதல்ல.
விக்டர் ஐவன் |
அரசாங்கக் குழப்பத்தின்போது, புதியதொரு அரசாங்கம் தெரிவு செய்யப்படலாம். இவ்வறானாதொரு குழப்பத்தின்போது பாதிக்கப்படுவது அதிகாரத்திலிருந்து வீழ்ந்துபோகும் ஆளும் கட்சி மாத்திரமே.
ஆனால், அரசியல் முறைமையின் குழப்பத்தின்போது, அது ஆளும் கட்சியை மாத்திரமன்றி, எதிர்கட்சி மற்றும் மொத்த சமூகத்தின் மீதும் பாதிப்புச் செலுத்தும். இந்த அனைத்துத் தரப்பினரும் இதனால் பாரிய குழப்பத்துக்குத் தள்ளப்படுவர்.
இச்சிறிய புத்தகத்தை இலங்கையின் அரசியல் முறைமை முகம் கொடுத்துள்ள குழப்பம், அதற்கான காரணங்கள், அதன் அடையாளங்கள் மற்றும் அது பயணித்துக் கொண்டிருக்கின்ற திசை பற்றி எழுதப்பட்டுள்ளள விவரணமாகக் கொள்ளலாம்.
இந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு கட்டுரைகளும், இதற்கு முன்னர் எழுதி வெளியிடப்பட்டவையாயினும், மீண்டும் அவை எதிர்பார்க்கப்படும் குறிக்கோளுக்கு ஏற்ப இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் முறைமையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் மாத்திரமே, இந்தக் குழப்ப நிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான விடயங்களின் பாதிப்புக்களை மக்களுக்குக் குறைத்துக் கொள்ள முடியும்.
இச் சிறிய புத்தகத்தை வெளியிடுவதன் நோக்கம், இந்த விடயம் குறித்து மக்களை அறிவூட்டுவதாகும்.
விக்டர் ஐவன்,
83,
பிலியன்தல வீதி,
மஹரகம.
83,
பிலியன்தல வீதி,
மஹரகம.
No comments:
Post a Comment