Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.

Tuesday, August 30, 2016

ஐ.எஸ். - ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!

ஆங்கிலத்தில்: டானியா ஒகம்பொஸ்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய தேசம் என்று தம்மை பிரகடனம் செய்து கொண்டு ஐ.எஸ் இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 12 வீதமான நிலப் பகுதியை 2016 இன் ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத் தகவல்கள் ஐ.எஸ்.எஸ்ஸின் நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஐ.எஸ் தம் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின் ஆரம்பப் பகுதியில் ஐ.நா உதவியில் லிபியாவில் இயங்கும் அரசு (ஐ.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள் சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஐ.எஸ். யுத்த களத்தில் தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று, ஐ.எஸ். ஒரு பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும் என்பது புலனாகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இன,மத சூழலமைவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், ஐ.எஸ், இராணுவ ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.

Thursday, August 18, 2016

துருக்கி - ரஷ்ய உறவின் மறுமலர்ச்சி

அஷ்கர் தஸ்லீம்
துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மீண்டும் சீரடையத்தொடங்கியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு விலாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருபக்க உறவு சீரடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிய விவகாரம் குறித்த முரண்பாடுகளும் கடந்த வருடம் ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கி இராணுவம் சுட்டிவீழ்த்தியமையுமே துருக்கி ரஷ்யாஉறவு சிதைந்தமைக்கான பிரதான காரணங்களாகும்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் சிரிய பொதுமக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை துருக்கி எதிர்த்துவருவதோடு, பஸார் அல் அஸாதின் இராணுவத்தினருக்கெதிராக போராடி வரும் போராளிகளுக்கு உதவிவருகின்றது. மறுபக்கம் ரஷ்யா பஷார் அஸாதின் நெருங்கிய கூட்டாளி என்பதால் அவருக்கு இராணுவ ரீதியாகவும் உதவி வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் ரஷ்ய போர் விமானமொன்று துருக்கி எல்லையினுள் வந்ததாக கூறி துருக்கி இராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவமே இரு நாடுகளுக்குமிடையிலான உறவை முற்றாக துண்டிக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யர்கள் துருக்கியை தரிசிக்கக்கூடாதென்று ரஷ்யா அறிவுறுத்தியது.

Tuesday, August 9, 2016

இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் - ருவன் விஜேவர்தன


தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

(தேசிய ஐக்கியத்துக்கான மன்றம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு வௌ;ளவத்தை எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடத்திய பாராட்டு உபசாரத்தின்போது அமைச்சர் ஆற்றிய உரை)

இந்த மதிப்புமிக்க நிகழ்வில் நான் பாராட்டப்படுவதன் மூலம் நான் உண்மையில் கௌரவிக்கப்படுகிறேன். இப் பெரும் நிகழ்வில் சில வார்த்தைகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளித்த தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எம். அமீன், நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல் ஒரு முன்னணி ஊடகவியலாளர் மட்டுமல்ல, அவர் ஐக்கியம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசும் ஒருவருமாவார். தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவராக இருப்பதன் மூலம், எமது நாட்டு சமூகங்களுக்கு மத்தியில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம், எமது நாட்டுக்கு பெரும் சேவையை அவர் செய்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி அறிமுகம் தேவையற்ற ஒருவர். இலங்கையின் மிகவும் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான அவர், அவரது பொது வாழ்வை, அவரது நாட்டுக்கும், அவரது சமூகத்துக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். 1959 இல் அவர் அரசியலுக்கு நுழைந்தது முதல், இலங்கை முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி விடுவதற்காக அயராது விடாமுயற்சியுடன் செயற்பட்டிருக்கிறார் அவர். வயதில் என்னை விட இரு மடங்காக உள்ளபோதும், எமது பாராளுமன்றத்தில் களங்கமில்லாத அரசியல்வாதியாக அவர் உள்ளார். அவரும் நானும் வித்தியாசமான, பல நேரங்களில் எதிர்த்தரப்பு நிற்கும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். ஆனாலும், நான் எப்போதும் மெச்சுகின்ற, மிகவும் மதிக்கின்ற ஒரு அரசியல்வாதியே அவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

Thursday, July 14, 2016

ஐ.எஸ்ஸை உருவாக்கியது டோனி பிளேயரும், ஜோர்ஜ் புஷ்ஷுமே!


ஆங்கிலத்தில்: அஸ்ஸாம் தமீமி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

பதிமூன்று வருடங்களுக்கு முன்னர், அப்போதைய பிரித்தானியாவின் பிரதமர் டோனி பிளேயர், ஐக்கிய இராச்சியத்தை யுத்தத்துக்கு அழைத்துச் செல்வதை, பொய்யான தகவல்களின் அடிப்படையில் நியாயப்படுத்தியிருந்தார்.

வேறு எவருமன்றி, அவர் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக, அப்போதைய அமெரிக்காவின் நவீனபழமைவாத ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷோடு இணைந்து கொண்டார் டோனி பிளேயர். அப்போது போருக்கு எதிரான இயக்கதிலிருந்த நானும் எனது சகாக்களும், யுத்தத்துக்கு செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டோனி பிளேயரையும், ஐக்கிய இராச்சிய அரசையும் எச்சரித்தோம்.

எமது ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காது, நாம் எள்ளி நகையாடப்பட்டோம். ஏலவே எம்மில் பலரிடமும் ஆலோசனை சில விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தபோதும், அது முதல் அவ்வாறான ஆலோசனை பெறுவதிலிருந்தும், அரசின் உத்தியோகபூர்வ தொடர்புகளிலிருந்தும் நாம் வெளியேற்றப்பட்டோம். பிளேயர் நிர்வாகம் எம்மை அவமதித்தே நடந்து கொண்டது. சிலபோது நாம் தேசத்தின் எதிரி என்ற தரத்தில் கூட நடத்தப்பட்டோம்.

Friday, July 8, 2016

டோனி பிளேயர் ஒரு போர் குற்றவாளி!


ஆங்கிலத்தில்: ஜெமீ மெரில்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
(ஜெமீ மெரில்லின் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பரப்பாகவும், பிஸியாகவும் இருந்த பக்தாத் நகரின் கர்ராடா பகுதி தியில் எரிந்துகொண்டிருக்கம் சந்தர்ப்பத்திலும்கூட, கடந்த ஞாயிறு முதல் பல குடும்பங்கள் அங்கு வருகின்றன.

2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வீதியோரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட இத்தாக்குதலில் 250 அளவிலானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட சில்கோட் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அவசியமற்றதொன்றாகும். அப்போதைய ஈராக்கின் தலைவராக இருந்த சத்தாம் ஹுஸைன் உடனடியாக அச்சுறுத்தலாக விளங்காதமையால், அமைதியான மாற்று வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவ்வறிக்கை சுடு;டிக்காட்டுகின்றது.

இராணுவ ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் பலமுறை எச்சரிக்கப்பட்டாலும் அவற்றை அவர் புறக்கணித்து விட்டார் என்று ஸர் ஜோன் சில்கோட்டின் ஈராக் விவகாரம் குறித்த விசாரணை குறிப்பிடுகின்றது.

Tuesday, July 5, 2016

துருக்கி - இஸ்ரேல் உடன்படிக்கை காஸா முற்றுகையை நீக்குமா?


ஆங்கிலத்தில்: யுவோன் ரிட்லி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

நாம் ரமழானின் இறுதி நாட்களை கடத்தி வருகின்ற நிலையில், உலகெங்கும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தர்மங்கள் வழங்கி வருகின்றனர். வழமைபோன்றே, காஸாவும் அதிகளவு தேவைகளைக் கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது.

கடந்த ஒரு தசாப்த காலமாக காஸாவின் நிலை மோசமாக உள்ளது. இஸ்ரேலும், எகிப்தும் காஸாவை சூழ இட்டுள்ள முற்றுகை காரணமாக, மனிதநேய உதவிகளும், காஸாவின் உட்கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்பவதற்கான பணிகளும் தடைப்பட்டுப் போயுள்ளன. காஸாவில் இரண்டு மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர்.

எனது தனிப்பட்ட அனுபவத்தின்படி, உதவிகளில் தங்கியிருக்கும் நிலையை பலஸ்தீனாகள் விரும்புவதில்லை என்பதை அறிந்த வைத்திருக்கின்றேன். இருப்பினும், மோசமான முற்றுகை காரணமாக காஸாவில் வாழ்வோர் பெருமளவு வறுமையாலும், கஷ்டத்தாலும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். உண்மை சொல்வதென்றால், மேற்குக் கரையை ஆளும் பலஸ்தீன அதிகார காஸாவின் இந்நிலை குறித்து சந்தோசமாகவே உள்ளது. அரபுலகிலுள்ள பலஸ்தீன அதிகார சபையின் சில கூட்டாளிகளும் இது குறித்து சந்தோசமாகவே உள்ளன.